யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கால்நடைபயிர்கள் ஒருங்கிணைந்த முறை
அறிமுகம்
பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை, சக்திவலு உற்பத்தி போன்ற அனைத்து செயற்பாடுகளையும் ஓரே நிலத்தில் மேற்கொள்ளும் ஒரு பண்ணை முறையே “ஒருங்கிணைந்த பண்ணை முறை” எனப்படும்.
இங்கு ஒரே நிலத்திலேயே விவசாயப் பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மைக்கு அவசியமான தீவனங்களைச் செய்கைபண்ணல், புற்கள், அவரைப் பயிர்களைச் செய்கைபண்ணல், பண்ணை விலங்குகளை வளர்த்தல் என்பனவற்றை ஒன்றிற்கொன்று தொடர்புகள் ஏற்படக் கூடியவாறு மேற்கொள்ளல் ஆகும். விவசாயப் பயிர்களிலிருந்து அகற்றப்படும் பாகங்கள் (பயிர் மீதிகள்) விலங்குகளின் தீவனமாகப் பயன்படுத்தப்படும். பண்ணை விலங்குகளின் மலம், சலம் என்பனவற்றைப் பயன்படுத்தி உயிர் வாயு உற்பத்தி செய்யப்படும். இதனால் சக்திவலு உற்பத்தி செய்யப்படுவதோடு, உயிர் வாயு உற்பத்தியின் பின்னா வெளியேறும் கழிவுகளை (ஸ்லரி) மிகச் சிறந்த உரமாகவும், மீன்கள், தாராக்கள் என்பனவற்றிற்கான உணவாகவும் பயன்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த பண்ணை முறையின் மூலம் விவசாயத்தின் உற்பத்தித்திறனைப் போலவே இலாபத்தையும் அதிகரிக்க முடியும். இது விசேடமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கு மிகவும் முக்கியமானதாகும். இதேபோன்ற இம்முறை எதிர்காலத்திற்கும் மிகவும் உகந்ததாகும். இதற்கான காரணம் அதிகரித்து வரும் சனத்தொகையின் காரணமாக நிலப்பரப்பின் அளவு மட்டுப்படுத்தப்படல், உணவில் தன்னிறைவடைதற்கு முயற்சித்தல் என்பனவாகும்.
அனுகூலங்கள் :-
  1. பயிர்கள், விலங்குகள், மீன்கள் என்பனவற்றைக் கொண்ட ஒரங்கிணைந்த பண்ணைகளினால் உற்பத்தியை அதிகரிக்கலாம். இம்மூன்று துறைகளிலுமே உற்பத்தி அதிகரிக்கும். .
  2. இம்முறையின் மூலம் பண்ணையின் வினைத்திறன் அதிகரிப்பதோடு, இயற்கை வளங்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படும்.
  3. முறையான இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருங்கிணைந்த உற்பத்தி செயன்முறை போசணை மீள்சுழற்சி, உணவுப் பாதுகாப்பு, வறுமையை ஒழித்தல், சுற்றாடல் பாதுகாப்பினை நிலைபேறாகப் பராமரித்தல் என்பனவற்றிற்கு உதவும்.


விலங்குகள், ஆண்டுப் பயிர்களின் ஒருங்கிணைந்த பண்ணை 

இங்கு ஆண்டுப்பயிர்களாக நெற்செய்கை, மரக்கறிச் செய்கை, புற் செய்கை, குறிப்பிட்ட சில பழங்கள் என்பன பயன்படுத்தப்படும்
(01) நெல் - புற்கள் - பசு ஒன்றிணைந்த பண்ணை 

வயல்களில் நெல்லையும், கைவிடப்பட்ட வயற் துண்டங்களிலும், எல்லைகளில் புற்களையும் பயிரிடலாம். பசுக்களிற்குத் தீவனமாக இப்புற்களை வழங்கலாம். நெல்லை அறுவடை செய்த பின்னர் வயலில் மேச்சலிற்கு விடலாம். நெல்லிற்கும் புற்களிற்கும் உரங்களை இடுவதற்கு சாணத்தைப் பயன்படுத்தலாம். உரங்களை புற்களுடன் கலந்து வயலிற்கு உரமாக இடலாம். இதனை நெல் நாற்றுக்களை இடுவதற்கு இரண்டு கிழமைகளிற்கு முன்னர் இட வேண்டும். இதன் மூலம் பிரதான பயிரான நெல்லின் விளைச்சலையும் அதிகரிக்கலாம்.
இப்பண்ணை உலர் வலயத்தில் அல்லது இடை உலர் வலயத்தில் அமைந்திருக்குமாயின் புற் செய்கைக்கு சிராட்ரோவைப் (Siratro) பயன்படுத்தலாம். இதற்கான காரணம் சிராட்ரோவை நீர் நன்கு வடிந்து செல்லக் கூடிய நீர் தேங்கி நிற்காத இடங்களிலேயே செய்கை பண்ணலாம்.
இந்த ஒருங்கிணைந்த பண்ணையிலிருந்து கிடைக்கும் அனுகூலங்கள்
  1. நெல் விளைச்சல் அதிகரிப்பதோடு, அதன் மூலம் பண்ணையின் வருமானம் உயரும். 
  2. உரங்களிற்கு ஏற்படும் செலவில் சுமார் 50 – 70% வரை குறையும்.
  3. பண்ணை தாவரங்களின் உயிர் நிறை (Forage Biomass) அதிகரிப்பதனால் வளர்க்கக் கூடிய பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
  4. அதிகளவான உலர் வரட்சியான காலங்களில் சிராட்ரோ வெற்றிகரமாக வளர்வதனால், அதனை பெறுமதியான விலங்கு தீவனமாக வழங்கல் 
  5. வருடம் முழுவதும் ஒரே மாதிரியான உணவு முறை வளாச்சியடைவதால், விலங்குகளின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

(02) நெல் - மீன்கள் ஒன்றிணைந்த பண்ணை

விவசாய நாடாக இலங்கையில் பிரதானமாக நெல் செய்கைபண்ணப்படுவதோடு, அது நீரை அடிப்படையாகக் கொண்டு பயிரிடப்படுகின்றது. இதனால் நெல், மீன்கள் ஒன்றிணைந்த பண்ணை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அனுகூலங்களි
  1. நெல் விளைச்சலுடன், பெறுமதியான விலங்குப் புரதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். 
  2. நெற்செய்கையில் பாதிப்பை எற்படுத்தும் பூச்சிகள், புழுக்கள், அல்காக்கள், களைகள் என்பன மீன்களினால் உண்ணப்படல். 
  3. மண்ணில் காற்றூட்டம் அதிகரிக்கும். 
  4. மீன்களின் கழிவுகள் உரமாக நெல்லிற்கு இடுவதனால் நெல்லிற்கு அதிகளவான போசணைகள் கிடைக்கும்.
  5. மீன்கள் உணவைப் பெறுவதற்கு அங்குமிங்கும் அசைவதனால் நீர் குழப்பப்படும். இதனால் அங்கும், இங்கும் அசைவதால் கனிப்பொருளாதல் அதிகரிப்பதோடு, போசணை வயல் முழுவதும் சீராகப் பரவும்.
  6. நெல்லை மாத்திரம் செய்கைபண்ணும் போது விளைச்சல் குறையும் ஆபத்து இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் குறைக்கப்படும்.

பொருத்தமான மீன் இனத்தைத் தெரிவு செய்யும் முறை
  1. அதிக வளர்ச்சி வேகத்தைக் கொண்ட மீன் இனங்களைத் தெரிவு செய்தல் 
  2. ஆழமற்ற நீரில் வாழ்வதற்கு இசைவாக்கமடைவதற்கான வல்லமை
  3. அதிகளவான வெப்பநிலை, குறைவான ஒட்சிசன் என்பனவற்றைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை
  4. நெல்லைப் பாதிக்காத வாக்கமாயிருத்தல்
  5. சந்தையில் கிராக்கி நிலவும் இனமாகக் காணப்படல
  6. அம்மீன்கள் கிடைக்கும் தன்மை
    நன்னீர் மீன்களை விட கடனீரேரிகளில் வாழும் மீன்களிற்கு வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் வல்லமை உள்ளது. இங்கு முக்கியமானது பொருத்தமான நெல் வர்க்கத்துடன் பொருத்தமான மீனை ஒருங்கிணைப்பது ஆகும். இதே போன்று இந்த ஒருங்கிணைந்த முறையில் நெல்லைச் செய்கைபண்ணும் போது அதற்கு பீடைநாசினிகள், களைநாசினிகள் என்பனவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பீடைகளையும், களைகளையும், அழிப்பதற்கு பாரம்பரிய முறைகளை மேற்கொள்வது மிகவும் உகந்ததாகும். இதன் மூலம் சுற்றாடல் மாசடைவதையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
முதலாவது முறை (The Captural System)

நெல் வயலிற்கு நீர் வரும் பாதையின் வழியே, அப்பாதையில் உள்ள மீன்களை (Wild fish) வயலிற்கு வரச் செய்வதாகும். இது நெல்லைச் செய்கைபண்ணும் அனைத்து பிரதேசங்களிற்கும் பொருத்தமானதாகும். இதற்கு ஏற்படும் தொழிலாளர்களிற்கு குறைந்தளவான செலவே ஏற்படும். மீன்களை பிடிப்பதற்கு முன்னர் வயலில் சிறு சிறு குழிகளை வெட்டி அவற்றிற்கு மீன்கள் செல்வதற்கு வழியேற்படுத்தப்பட்டு, அக்குழிகளிலிருந்து மீன்கள் பிடிக்கப்படும். நெல்லை அறுவடைசெய்வதற்கு சில நாட்களிற்கு முன்னர் மீனை அறுவடை செய்தல் வேண்டும்.

இரண்டாவது முறை (The Cocurrent system) 

இங்கு வயலில் ஆரம்பித்திலிருந்தே நெல்லைச் செய்கைபண்ணுவதற்கும், மீனை வளர்ப்பதற்கும் ஆயத்தங்களைச் செய்தல் வேண்டும். இதற்கு அதிகளவான செலவும், தொழிலாளர்களும் அவசியமாகும். 500 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட வயல்களிற்கே இது மிகவும் உகந்த ஒரு முறையாகும்.
வரம்பின் உயரம் 60 சதம மீற்றரை விட அதிகமானதாக இருத்தல் வேண்டும். இதன் மூலம் நீர் பொசிந்து செல்வது தடுக்கப்படுவதோடு, மண்ணரிப்பும், இரைகௌவிகள் வயலிற்கு வருவதும் தடுக்கப்படும். நீர் மெதுவாக ஓடக் கூடியவாறு ஆயத்தம் செய்ய வேண்டும். அத்துடன் உள்ளே வரும் நீர் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். இங்கு பீடைநாசினிகள் போன்றன கலந்துள்ளதா என்பதையிட்டும், அந்நிய மீன்கள் (Wild fish) வருகின்றனவா என்பதையிட்டும் கவனம் செலுத்த வேண்டும். கடுமையான மழைக் காலத்தின் போது நீர் வரும் பாதையை மூடி விடல் வேண்டும். இதேபோன்று மழை வெள்ளத்துடன் மீன் வெளியேறாதவாறு பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வயலில் நீர் மட்டம் மிகவும் குறையுமாயின் இரைகௌவிகள் மீனைப் பிடித்து உண்பதோடு, வெப்பநிலையும் உயரலாம். இதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு வயலின் எல்லையைச் சுற்றி அல்லது வயலிற்கு ஊடாக சிறிய கானொன்றை வெட்ட வேண்டும்.
ஒரு வயலில் இட வேண்டிய மீன்களின் எண்ணிக்கை வயலின் பரப்பளவிற்கு ஏற்ப வேறுபடும். நீரின் ஆழம் 5 – 7.5 சதம் மீற்றராக உள்ள ஒரு வயலில் சுமார் 3500 மீன்கள் வரை வளர்க்க முடியும். நெல்லைச் செய்கைபண்ணும் காலப் பகுதியில் அவை 10 ச.மீ நீளமானவையாக வளர்ச்சியடையும்.
பொருத்தமான மீன் இனங்கள்
  • Caprinus carpio
  • Tilapia spp
  • Trichogaster pectoralis
  • Cat Fishes
  • Haplochromis mellandi
  • Ophicephalus
  • Astatoreochromis
  • Labyrinth Fishes
  • Catla catla
இதற்கு மிகவும் பொருத்தமானது பொதுவான கார்ப் மீன்களாகும். இவற்றின் வாழ்தகவு மிகவும் அதிகமாகும். திலாப்பியா வர்க்கங்களும் திருப்திகரமான விளைச்சலைத் தரும். இவை அதிகளவான வெப்பநிலைகளைத் தாங்கிக் கொள்ளும்.
உரங்களை இடல் 

நெல், மீன்கள் ஆகிய இரண்டும் வளர்ச்சியடைவது உரங்களை இடுவதிலேயே தங்கியுள்ளது. இட வேண்டிய உரங்கள், அவற்றின் அளவு, இடப்படும் முறை, வயலின் மண்ணின் வகை என்பன விவசாயிகளின் பழக்கம். மண்ணின் வகை என்பனவற்றிற்கு ஏற்ப வேறுபடும்.

(03) ெல் - மீன்கள் - அசோலா – தாரா என்பன ஒருங்கிணைந்த முறை

நெல் - மீன்கள் ஒருங்கிணைந்த பண்ணை சிறு அளவிலான விவசாயிகளிற்கு மிகவும் வெற்றிகரமான ஒரு முறையாகக் காணப்பட்டாலும் கூட, சில சந்தர்ப்பங்களில் வயலில் மீன்களிற்குப் போதியளவான உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நெல் பற்றையாக வளர்வதால், எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைய முடியாமலிருக்கும்.
இப்பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்வதற்கு இவ்வயலிற்கு அசோலா எனப்படும் நிர் தாவரத்தையும், தாராவையும் அறிமுகப்படுத்த முடியும். இதன் மூலம் அதிகளவான போசணைகள் வயலில் தேங்கி நிற்பதால் அதிகளவான மீன் விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அனுகூலங்கள் :-
  • பண்ணையின் போசணை நிலைமையை மேம்படுத்தல்
  • போசணை நிலைமை அதிகரிப்பதால் விளைச்சல் அதிகரிப்பதோடு, அதன் விளைவாக இலாபமும் அதிகரிக்கும்.
  • பீடைகளைக் கட்டுப்படுத்தல்
  • உணவு கிடைப்பது அதிகரிக்கும
அசோலா என்பது நீரில் வாழும் ஒரு பன்னமாகும். நீரில் மிதக்கும் தாவரமான இதனை மீண்டும் நெல் நாற்றுக்களை நடும் போது விவசாயிகள் வயலில் அறிமுகப்படுத்துவர். அசோலா இலைகளின் மீது நீலப் பச்சை அல்காக்கள் வாழக் கூடியவாறு மத்தியில் துளை ஒன்று உள்ளது. உலர் காலங்களில் இந்த அசோலா தாவரங்கள் இறந்து போவதோடு, அதன் போசணைகள் எதிர்காலத்தில் நெல்லைச் செய்கைபண்ணுவதற்காக மண்ணுடன் ஒன்று சேர்க்கப்படும்.
(04) மரக்கறி – புற்கள் - பசு ஒன்றிணைந்த பண்ணை 

சிறியளவிலான விவசாயிகள் உண்பதற்கும், வருமானம் பெறவும் ஒரு வழியாக மரக்கறிகளைச் செய்கைபண்ணிய போதிலும் எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைய முடியாதுள்ளது, ஆனால் ஒருங்கிணைந்த பண்ணை முறையின் மூலம் திருப்திகரமான பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அனுகூலங்கள் ි :-
  • பிரதான பயிரான மரக்கறிகளின் விளைச்சலை அதிகரிக்க முடியும்.
  • புற்களைச் செய்கைபண்ணுவதன் மூலம் மண் வளமடைவதோடு, மண்ணரிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும். 
  • புற்களை பசுக்களிற்கு உணவாக வழங்க முடியும்.
  • உரங்களிற்கு ஏற்படும் செலவைக் குறைக்க முடியும் 
  • உயிரியல் வாயுவை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
மரக்கறிகள் செறிவாகச் செய்கைபண்ணப்படுவதால் (Intensive cultivation) ஏற்படும் மண்ணரிப்பை தடுப்பதற்கு புல் வேலிகளை நட முடியும். இதற்கு நேப்பியா முளைவகை 13 போன்ற புற்களைப் பயன்படுத்தலாம். நிலத்தின் சரிவான இடங்களில் புல் வேலிகளை சமவுயரக் கோட்டின் வழியே நடுகை செய்தல் வேண்டும்.
பசுவின் கோமயத்துடன் (சிறுநீர்) பண்ணைகளிலுள்ள ஏனைய கழிவுகளைப் பயன்படுத்தி உயிரியல் வாயுவை உற்பத்தி செய்துகொள்ள முடியும். அத்துடன் அதிலிருந்து வெளியேறும் உரங்களை (Slurry) மரக்கறி, புற்கள் என்பனவற்றிற்கு இடுவதற்கப் பயன்படுத்தலாம்.
(05) மரக்கறி - மீன் ஒருங்கிணைந்த பண்ணை

நில வசதி குறைந்த விவசாயிகளிற்கு இது மிகவும் உகந்த ஒரு முறையாகும். இங்கு மீன்களை வளர்க்கும் குளங்களின் கரைகள் மிகவும் பலமானதாக அமைத்தல் வேண்டும். புற்களை நட்டு கரைகளைப் பாதுகாக்க வேண்டும் அல்லது சீமெந்தினால் பூசி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். இதன் பின்னர் குளங்களின் கரைகளைச் சுற்றி (கரைகளிலிருந்து மூன்று அடி தூரத்தில்) மரக்கறிகளைச் செய்கைபண்ணலாம்.
மண்ணைத் தளர்வாக்க அவசியமில்லாத வெண்டி, சாக்கரைப் பூசணி, தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களைக் குளத்தைச் சற்றி நடலாம். பூசணி நிலத்தில் படர்ந்து வளர்வதால் மண் பாதுகாக்கப்படும். மரக்கறிச் செய்கையில் மண் வளத்தை அதிகரிப்பதற்கு குளத்தின் பொருக்குகள் (குளத்தின் அடியிலுள்ள மண் போன்ற பொருட்கள்), குளத்திலுள்ள நீர் என்பனவற்றையும் வழங்கலாம். மேலும் மீன்கள் உண்பதற்குத் தேவையான லெமா போன்ற தாவரங்களை குளத்தில் செய்கைபண்ணலாம்.

(06) மரக்கறி – மீன் - தாரா – பன்றி ஒருங்கிணைந்த முறை 

இந்த ஒருங்கிணைந்த முறையில் நிலத்திலுள்ள வளம் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தப் படுவதோடு, சுற்றாடல் மாசடைவதைக் குறைத்து அதிகளவான விளைச்சலையும் பெற்றுக்கொள்ள முடியும். குளத்தில் மீனையும், குளத்தின் மண்ணால் தயாரிக்கப்பட்ட தாரா கூட்டில் தாராவை வளர்க்கவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பன்றிக் கூட்டையும் குளத்திற்கருகே அமைப்பதனால், அவற்றின் கழிவுகளையும் குளத்திற்கு செலுத்தலாம்.
இங்கு கருத்திற்கொள்ள வேண்டிய ஒரு அம்சம் குளத்தின் அளவிற்கேற்றவாறு உரங்களை இடுவதாகும். தேவைக்கு அதிகமாக உரமிடும் போது மீன்களிற்கு ஆபத்தானதாக மாறலாம். பொதுவாக அயன மண்டல நாடுகளில் மீன்களின் குளங்களிற்கு சிபார்சு செய்யப்பட்ட பன்றி உரத்தின் அளவு ஹெக்டயருக்கு நாளொன்றிற்கு சுமார் 100 -200 கிலோ கிராம்கள் ஆகும். சிபார்சு செய்யப்பட்ட தாரா உரத்தின் அளவு 100 – 120 கிலோ ஆகும்.
குளத்தின் விஸ்தீரணத்திற்கு அமைய குளத்திற்கு இட வேண்டிய உரங்களின் அளவைத் தீர்மானித்துக்கொள்ள முடியும். மரக்கறிகளின் கழிவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பசுந்தாட் பசளைகளும் இவற்றோடு சோவதனால், அந்த விகிதத்திற்கு ஏற்ப பன்றி, தாரா என்பனவற்றின் கழிவுகளைக் குறைத்து இடல் வேண்டும். பன்றி, தாரா என்பனவற்றின் உரங்களின் மூலம் குளத்திலுள்ள மிதக்கும் நுண் தாவரங்கள், மிதக்கும் நுண் விலங்குகள் (பிளாங்டன் Plankton), மீன் என்பனவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். குளத்திலிருந்து கிடைக்கும் அடையல்களை உரமாக மரக்கறிகளிற்கு இடலாம். பயிர்களிற்குத் தேவையான நீரை குளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மரக்கறிகளின் மீதிகள், கழிவுகள், பண்ணையிலுள்ள ஏனைய கழிவுகள் என்பனவற்றை பன்றிகளின் உணவுடன் கலந்து வழங்கலாம்.
அனுகூலங்கள் :-
  • நிலத்தை முறையாகப் பயன்படுத்துவதால், இயற்கை வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்யலாம்.
  • சுற்றாடல் மாசடைவதைக் குறைத்துக்கொள்ள முடியும். இந்த ஒருங்கிணைந்த பண்ணையிலுள்ள அனைத்து அங்கங்களினதும் உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். 
  • மீன்களிற்கான செலவைக் குறைத்துக்கொள்ள முடியும்.
  • மரக்கறிகளிற்கு ஏற்படும் உரச் செலவைக் குறைத்துக்கொள்ள முடியும்.
  • ஒரு உற்பத்தியினால் உருவாகும் கழிவுப் பொருட்களின் அளவைக் குறைத்துக்கொள்ள முடியும.
  • பண்ணையின் கழிவுப் பொருட்களை ஒவ்வொரு உற்பத்திக்கும் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
(07) வாழை – புற்கள் - ஆடு ஒருங்கிணைந்த முறை 

பழப்பயிர்களில் வாழைக்குச் சிறந்த கிராக்கி நிலவுகின்றது. விவசாயிகள் வாழையிலிருந்து விரைவாக வருமானத்தைப் பெறுவதற்கும், ஏனைய பழப்பயிர்களைப் போல்லாது பயிர்ச்செய்கைக் காலம் முழுவதிலும் இதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பதாலும், பெரும்பாலான விவசாயிகள் வாழையைச் செய்கைபண்ணுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதேபோன்று வாழையை எந்தவொரு பிரதேசத்திலும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். எனவே இந்த ஒருங்கிணைந்த பண்ணையிலிருந்து அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு வாழையை 4X4 மீற்றா இடைவெளியில் நடுவதன் மூலம் அதிகளவான சூர்pய வெளிச்சத்தின் கீழ் புற்களையும் வெற்றிகரமாகச் செய்கைபண்ண முடியும். சிபார்சு செய்யப்பட்ட ஏனைய இடைவெளியான 2 x 2.7 மீற்றர் இடைவெளியிலும் புற்களைச் செய்கைபண்ண முடியும்.
ஆடுகளை இரண்டு முறைகளில் வளாக்க முடியும். அதாவது செறிவாக (Intensive) வளர்த்தல் மற்றையது ஓரளவு செறிவாக (Sem intensive) என்பனவாகும். செறிவான முறையில் ஆடுகளை ஆட்டுர் தொழுவங்களில் வளர்ப்பதோடு, அவற்றிற்குத் தீவனமாக அறுவடை செய்யப்பட்ட வாழைகளின் இலைகளையும், தண்டுகளையும் சிறு துண்டகளாக வெட்டி வழங்குவதாகும். ஆடுகளின் கழிவுகளை பசளையாக வாழைக்கு இடலாம்
ஓரளவான செறிவான முறையின் கீழ் புற்றரைகளில் (மேச்சல் தரை) ஆடுகள் மேய விடப்படும். இங்கு ஆடுகள் வாழைகளைச் சேதப்படுத்தாதவாறு அவற்றைக் கட்டி வைத்தல் வேண்டும். இதன் மூலம் உரங்கள் நேரடியாக வாழைத் தோட்டத்திற்குக் கிடைப்பதோடு, தொழிலாளர்களிற்கான செலவும் குறையும்.
(08) பழங்கள் – புற்கள் - மீன் ஒருங்கிணைந்த முறை 

சிறியளவான நிலமுள்ள விவசாயிகளிற்கு இம்முறை உகந்ததாகும். இங்கு மீன்களின் குளத்தைச் சுற்றியுள்ள வரம்புகளில் சிறிய பழ மரங்கள் செய்கைபண்ணப்படும். கொய்யா, அன்னாசி, ஜம்பு, கொடித்தோடை போன்ற சிறிய பழ மரங்கள் இதற்கப் பொருத்தமானவையாகும்.
குளத்தின் கரையைச் சுற்றி புற்களைச் செய்கைபண்ணலாம். இதன் மூலம் கரைகள் அரித்துச் செல்லப்படுவதைத் தவிர்த்தக்கொள்ள முடியும். மீன்களின் குளத்திலுள்ள அடையல்களை பழங்களிற்கும், புற்றரைகளிற்கும் உரமாக இடலாம். பண்ணையிலும், வீட்டிலும் மீதமாகும் கழிவுகளை குளத்திலுள்ள மீன்கள் உண்பதற்கு வழங்கலாம். சிறிய இடப்பரப்பாயினும் வீட்டின் எல்லையில் ஒரு பசுவைவை வளர்ப்பதன் மூலம் குளத்தைச் சுற்றியுள்ள கரையில் புற்களை வெட்டி அதற்கு வழங்கி அதனையும் பராமரிக்கலாம்.
(09) பழங்கள் – புற்கள் - பசு ஒருங்கிணைந்த முறை

பல்லாண்டு பழப்பயிர்களைச் செய்கைபண்ணும் நிலத்தில் மிக இலகுவாக ஒருங்கிணைந்த பண்ணை முறையை மேற்கொள்ள முடியும். இங்கு தோடை, மா, ரம்புட்டான், மங்குஸ்தீன், ஆனைக்கொய்யா போன்றவற்றின் கீழ் புற்களை நடலாம். புற்களிற்கு பிரக்கேறியா பிரசாந்தாவைப் பயன்படுத்தலாம்.
இப் புற்செய்கையின் பயனாக பழத்தோட்டத்திலுள்ள மண் பாதுகாக்கப்படுவதோடு, போசணைகளும் கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுப்பதற்கு, நேப்பியா முளை வகை 13 இனைப் பயன்படுத்தலாம். பண்ணையிலுள்ள பசுக்களிற்கு இப்புற்களை வெட்டிக் கொடுக்கலாம். பசுக்களை புற்றரைகளின் மீது சுயாதீனமாக மேய விடும் போது அவை பழ மரங்களைச் சேதப்படுத்தலாம். பசுவின் எருவை இட்டு பழச் செய்கையையும், புற்றரைகளையும் வளப்படுத்தலாம்.
விலங்குகள்பல்லாண்டுப் பயிர்கள் ஒருங்கிணைந்த பண்ணை முறை 

அனுகூலங்கள் ි :-
  1. தரமான புற்களைப் போலவே உப உற்பத்திப் பொருட்களையும் (விலங்குகளிற்குத் தேவையானவை) தேவையான போது, தேவையான அளவில் பெற்றுக்கொள்ள முடியும்.
  2. புற்களைப் போலவே, அவரைப் பயிர்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
  3. விலங்குகளிற்குப் போலவே, பயிர்களிற்கும் சாதகமான சுற்றாடல் கிடைக்கும்
  4. விலங்குகளின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
  5. பல்லாண்டுப் பயிர்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
  6. களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்படும் செலவு குறையும்.
  7. பண்ணை விலங்குகளின் (பசு, ஆடு, பன்றி, கோழி) கழிவுகளை உரமாகப் பயன்படுத்துவதனால் உரங்களிற்கான செலவு குறையும்.
  8. அவற்றின் கழிவுகளிலிருந்து உயிரியல் வாயுவை உற்பத்தி செய்து, அதனை சக்திவலுவாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  9. ஓரு பயிரையோ அல்லது விலங்கையோ வளர்ப்பதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
  10. இயற்கை வளங்களை உச்ச அளவில் வினைத்திறனாகப் பயன்படுத்துவதனால்,நிலைபேறான சுற்றாடல் உருவாகும்.
  11. சுற்றாடல் மாசடைதலைக் குறைக்க முடியும.
(10) தேயிலை – புற்கள் - பசுக்கள் ஒன்றிணைந்த பண்ணை முறை

தேயிலைத் தோட்டங்களில் இலகுவாக மேற்கொள்ளக் கூடியதொரு ஒருங்கிணைந்த பணணை முறையாகும். சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இதன் மூலம் அதிகளவான உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும். பெரும் தேயிலைத் தோட்டங்களில் கூட தேயிலை செய்கைபண்ணப்படாத இடங்களில் புற்களைச் செய்கை பண்ணி பசுக்களை வளர்க்க முடியும். 
தோட்டங்களில் விவசாயிகளின் பசுக்களைப் பராமரிப்பதற்காக பொதுவான மாட்டுத் தொழுவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேயிலை செய்கைபண்ணப்படாத இடங்களில் நேப்பியா 13 முளைவகை போன்ற உயரமாக வளரும் புற்களை நடலாம். இதேபோன்று நிலத்தின் மண்ரிப்பைத் தடுப்பதற்கு சமவுயர வேலி முறையில் தீவனப் புற்களைச் செய்கைபண்ணுவதோடு, அவற்றை பசுக்களிற்குத் தீவனமாகவும் வழங்கலாம்.
பசுக்களின் சாணத்தை தேயிலைக்கும், புற்களிற்கும் உரமாக இடலாம். பசுவின் சாணம், அதன் சிறுநீர் என்பனவற்றிலிருந்து உயிரியல் வாயுவையும் உற்பத்தி செய்யலாம். வீட்டுத் தேவைகளிற்கு உயிரியல் வாயுவைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதிலிருந்து கழிவாக வெளியேறும் பொருட்களை உரமாகவும் பயன்படுத்தலாம்.
அனுகூலங்கள:-
  1. நிலத்தின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
  2. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யயும் விவசாயிகள் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
  3. பிரதான பயிரான தேயிலைக்கு இயற்கை உரங்களை இடலாம். இதனால் உரங்களிற்கு ஏற்படும் செலவைக் குறைக்கலாம்.
  4. புற்களைப் பயிரிடுவதனால் நிலத்தின் மண் பாதுகாக்கப்படுவதோடு, மண்ணரிப்பும் தடுக்கப்படும்.
  5. சாணம், சிறுநீர் என்பனவற்றைப் பயன்படுத்தி உயிர் வாயுவை உற்பத்தி செய்வதனால், அதனை வீட்டுத் தேவைகளிற்குப் பயன்படுத்தலாம். மீதமாகும் கழிவை (Slurry) உரமாகப் பயன்படுத்தலாம். 
  6. பசுக்களிலிருந்து கிடைக்கும் பசும் பால் வீட்டின் நுகர்விற்கும், மேலதிக வருமானத்தைப் பெறவும் உதவும்.

(11) தேயிலை – புற்கள் - ஆடு வளர்ப்பு ஒருங்கிணைந்த பண்ணை முறை
மேற்குறிப்பிட்ட முறையிலேயே சிறிய தேயிலைத் தோட்டங்களிலும், பெரும் தேயிலைத் தோட்டங்களிலும் இந்த ஒருங்கிணைந்த முறையைப் பயன்படுத்த முடியும். இந்த பண்ணை முறைகளில் ஆடுகளை வளர்ப்பதால் குடும்பத்திலுள்ள பெண்களிற்கு அல்லது வளர்ந்த பிள்ளைகளிற்கு விசேட நன்மைகள் கிட்டும்.

(12) இறப்பர் - புற்கள் - பசு ஒன்றிணைந்த பண்ணை 

பல்லாண்டுப் பயிரான இறப்பருடன் ஒருங்கிணைந்த பண்ணை முறை பரவலாக மேற்கொள்ளாத போதிலும் கூட இவ்வாறான புற்கள், பசுக்கள் ஒன்றிணைந்த பண்ணை முறையை இலகுவாக மேற்கொள்ள முடியும். இங்கு புற்களாக பரந்து வளரும் பியுரேறியா, கெலபொகோனியம் போன்ற அவரைக் குடும்பத் தாவரங்களை செய்கைபண்ண முடியும். இவற்றின் மூலம் மண்ணரிப்புத் தடுக்கப்படுவதோடு, மண்ணும் பாதுகாக்கப்படும்.
ஆனால் இறப்பர் தோட்டங்களில் பசுக்களை சுயாதீனமாக மேய விட முடியாது. ஏனெனில் இவை இறப்பர் பாலை அருந்த பழகி விடும். இது பசுக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கானதாக அமையும். பால் வெட்டுவதற்கு முன்னா பசுக்களை மேய விடலாம். எனினும் அவை இறப்பர் நாற்றுக்களைச் சேதப்படுத்தவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மிகவும் உகந்த முறை புற்களை வெட்டி அவற்றிற்கு வழங்க வேண்டும்.

(13) தென்னை – அன்னாசி – புற்கள் - பசு ஒன்றிணைந்த பண்ணை

பல்லாண்டுப் பயிர்களில் தென்னையிலேயே மிகவும் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த பண்ணை முறையை மேற்கொள்ள முடியும். தென்னை முக்கோணத்தில் ஒருங்கிணைந்த பண்ணைச் செய்கை முறை பிரபல்யம் அடைந்துள்ளது. தென்னந் தோட்டங்களின் எல்லைகளைப் பயன்படுத்தக் கூடியவாறு அன்னாசி, புற்கள் என்பனவற்றைச் செய்கைபண்ண முடியும்.

பசுக்கள் புற்களை உண்பதற்கு மேய விடலாம். எனினும் அன்னாசி பயிர்களிற்கு சேதம் ஏற்படாத வகையில் அவதானமாக இதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேலதிக் செலவில்லாது, பசுக்களின் சிறுநீர், சாணம் என்பனவற்றை பயிர்களிற்கு வழங்கலாம். இல்லாவிடில் புற்களை வெட்டி தொழுவங்களிலுள்ள பசுக்களிற்கு வழங்கலாம். தென்னை மரங்களிலிருந்து அகற்றப்படும் உரிமட்டைகள், தென்னந்தும்புத் தூள் என்பனவற்றை பசுக்களின் சாணத்துடன் கலந்து இயற்கை உரங்களை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதிலிருந்து மேலதிகமான வருமானத்தைப் பெறுவதோடு, தென்னை, அன்னாசி, புற்கள் ஆகியனவற்றிற்கு உரங்களையும் வழங்கலாம். உயிர் வாயுவை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

(14) தென்னை – மரக்கறி – புற்கள் – மீன் பசுஒருங்கிணைந்த பண்ணை 


இம்முறையில் தென்னந் தோட்டங்களில் மீன் வளர்ப்புக் குளங்களையும் பராமரிக்க முடியும். மீன் குளங்களைச் சுற்றி அல்லது அதற்கண்மையில் மரக்கறிகளைச் செய்கைபண்ண முடியும். அதேபோன்று தென்னம் மரங்களிற்கிடையே புற்களைச் செய்கைபண்ண முடியும். பசுக்களை இவற்றில் மேய விடலாம். புற்கள், மரக்கறி, தென்னை மரங்கள் என்பனவற்றிலிருந்து பெறப்படும் உப விளைவுப் பொருட்களை மீன்களிற்கு உணவாக வழங்க முடியும்.
இந்தப் பண்ணையில் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி உயிர் வாயுவை உற்பத்தி செய்வதற்கும், அதிலிருந்து மீதமாகும் கழிவை கூட்டெருவாக்கி பயிர்களிற்கும் இடலாம். மரக்கறிப் பயிர்களிற்கு அவசியமான நீரை அருகிலுள்ள குளத்திலிருந்து வழங்க முடியும்.
மேலே கலந்துரையாடப்பட்ட விலங்கு, பயிர்கள் முறைகள் விவசாயிகளின் விருப்பத்திற்கு அமையவும், நிலத்தின் அளவிற்கேற்பவும், அங்குள்ள வளங்களிற்கு ஏற்பவும் வேறுபாடுகளை ஏற்படுத்தி உயர்ந்த அளவான பயன்களையும், வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
பாற்பசு வளர்ப்பு
  • கன்றுகளை வளர்த்தல் 

    பாற்பசு முகாமைத்துவத்தில் கன்றுகளை வளர்த்தல் மிகவும் முக்கியமானதொரு அங்கமாகும். கற்பப் பசுக்களிற்கு உணவுகளை வழங்கல், ஒழுங்காக முகாமைத்துவம் செய்வது கன்றுகளின் பிறப்பு நிறையை (வளர்ந்த பசுக்களின் நிறையில் 6 – 8 %) சிறந்த நிலைமையில் பராமரிப்பதற்கு உதவும்.
புதிதாக பிறந்த குட்டிகளை பிறப்பின் போது பராமரித்தல்
  • கன்றின் மூக்கு, கண், காது என்னபனவற்றைச் சூழ ஒட்டியுள்ள சளியத்தையும், மென்சவ்வுகளையும் அகற்றவும்.
  • குட்டியின் பின்னங்கால்களை உயாத்துவதன் மூலம் சுவாசத் தொகுதியில் அடைபட்டுள்ள அனைத்து பொருட்களையும் அகற்ற முடியும். இதனால் குட்டி இலகுவாக சுவாசிக்க முடியும்.
  • குட்டியின் தொப்புளில் வயிற்றிலிருந்து ஒரு அங்குல தூரத்தில் முடிச்சொன்றை இட்டு, அயடின் கரைசல் (நோய்க் கிருமிகளை அழிக்கும்), வேப்பெண்ணெய் (ஈக்களை விரட்ட) என்பனவற்றை பூசவும்
  • பசு கன்றினை நக்குவதற்கு இடமளிக்கவும்.

  • கடம்புப் பாலை வழங்கல் (சீம்பால்) 
    பிரசவத்திலிருந்து முதல் நான்கு நாட்களிற்குள் பசுவினால் சுரக்கப்படும் பால் கடம்புப் பால் எனப்படும். இது நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும். அதிகளவான போசணைகளைக் கொண்டுள்ளதோடு, உணவுக் கால்வாயைச் சுத்தம் செய்யும்.

இயற்கையான பாலை வழங்கல்

இது குட்டிக்கு போசணைகளை வழங்குவதற்கான இலகுவானதொரு வழியாகும். எந்தவொரு வினைத்திறனான தூண்டலின் கீழும் பாலைக் கறப்பவரினால்75 – 80 % மான பாலை மாத்திரமே கறக்க முடியும். உற்பத்தி செய்யப்படும் மீதிப் பாலை குட்டியினால் மாத்திரம் பெறமுடியும். பொதுவான முறையில் கன்றைப் பராமரிக்கும் போது அதற்கு குறிப்பிட்ட சில நாட்களிற்கு மாத்திரமே தாய்ப்பால் வழங்கப்படும். இது மட்டுப்படுத்தப்பட்ட பால் வழங்கல் எனப்படும். இது பாலை சுரப்பதற்கும், பாலைக் கறப்பதற்கும் தூண்டப்படும். அத்துடன் குட்டியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, மடியழற்சி நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உதவும்.
குட்டிகளிற்கு பண்படுத்தாக உணவுகளையும், செறியுணவுகளையும் வழங்கல் 
குட்டிகளிற்கு பண்படுத்தாத உணவுகளையும், செறியுணவுகளையும் வழங்குவதன் நோக்கம் வழங்கும் பாலின் அளவைக் குறைத்து, அசையூன் வயிற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, விரைவாக பாலை மறக்கடிக்கச் செய்வதாகும். தரமான செறியுணவுகளையும், உலர் புற்களையும் 10 நாட்களிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். குட்டியின் மூக்கு, வாய் என்பனவற்றில் செறியுணவுகளைப் பூசி விடுவதன் மூலம் செறியுணவிற்குக் குட்டிகளைப் பழக்கப்படுத்தலாம்.
செறியுணவாக “Premix calf starter ration” அல்லது தேங்காய் பிண்ணாக்கு, அரிசித் தவிடு என்பனவற்றை 1:1 அல்லது 2:1 என்னும் விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.
  • குட்டிகள் போதியளவான வன் உணவுகளையும், செறியுணவுகளையும் உண்பதற்கு ஆர்வத்தையேற்படுத்தவும்.
  • வன் தீவனங்களையும், செறியுணவுகளையும் குட்டி உண்ணத் தொடங்குமாயின் 4 வது வாரத்திலிருந்து பால் வழங்குவதைத் தடுக்கலாம். வன உணவுகளையும், செறியுணவுகளையும் எப்போதும் தொழுவத்தில் வைக்கவும்.
  • கனிப்பொருள் கலவை அல்லது நீராவியில் அவித்த விதைத் தூள்களையும் உணவிற்காக வைக்கவும். எப்போதும் குடிப்பதற்கு சுத்தமான நீரை வைக்கவும்.
பாலை மறக்கடிக்கச் செய்வதற்கு உகந்த காலம்
  • குட்டியின் வயது 8 வாரங்களாகியதும் பாலை மறக்கடிக்கச் செய்யலாம். குட்டிகளின் உடல் வளர்ச்சியடைந்த விலங்குகளின் நிறையில் 10 – 12 % இனை அடைந்ததும் அல்லது அவற்றின் பிறப்பு நிறையைப் போன்று இரு மடங்காகியதும் பாலை மறக்கடிக்கச் செய்யலாம்.
  • குட்டிக்குப் போதியளவான செறியுணவையும் (0.5kg), உலர் புற்களையும் (0.5kg) உண்ணக் கூடிய சந்தர்ப்பத்தில்.
  1. இனங் காணல்: காதில் அடையாள சின்னங்களைத் தொங்க விடல், காதில் சிறு பகுதியை வெட்டல், பச்சைக் குத்தல்
  2. கொம்பு அகற்றல்: சூடாக்கிய இரும்பை அல்லது கோஸ்ட்றிக் பொட்டாசுவைப் (Caustic potash) பயன்படுத்தலாம்.
Caustic potash: இதனை முதலாவது வாரத்திலேயே மேற்கொள்ள வேண்டும். 2.5 சதம் மீற்றர் விட்டமுள்ள பிரதேசத்திலுள்ள மயிர்களை அகற்றிய பின்னர் கொம்பு முளைக்கும் இடத்தைச் சுற்றி கிறீசைப் பூசவும். இதனால் Caustic potash கண்ணில் படுவதைத் தடுக்கலாம். பரிகரனத்தின் பின்னர் குட்டியை ஒரு நாள் வரை தனியாக வைத்திருக்கவும்.

பெண் குட்டிகளைப்பராமரித்தல்
பெண் கன்றுக் குட்டிகள் நாரி என அழைக்கப்படும். உணவு, ஆரோக்கியம், வளர்ச்சி என்பனவற்றில் பினவரும் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
  • உயர்ந்தளவான வினைத்திறன்.
  • 12 மாதங்களில் பூப்படைதல்
  • 15 – 20 மாதங்களில் கர்ப்பம் தரித்தல்.
  • 24 – 30 மாதங்களில் பிரசவித்தலும், திருப்திகரமான பால் உற்பத்தியும்.
  • பிரசவத்தின் பின்னர் 70 நாட்களிலிருந்து 80 நாட்களுக்கிடையில் மீண்டும் வேட்கை அறிகுறிகளைக் காட்டலு்,மீண்டும் காப்பம் தரித்தலும்.
வேட்கை அறிகுறிகள்

பாற்பசுக்களைப் பராமரிப்பில் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமானதும், ஒரு விவசாயி அடிக்கடி தவறவிடும் ஒரு அம்சமாக வேட்கை அறிகுறிகளையும், இனப்பெருக்கத்தையும் குறிப்பிடலாம். இதனை இனங்காண முடியாத போது முதலாவது குட்டியைப் பெறுவதற்கு அதிக காலம் எடுக்கலாம் அல்லது குட்டிகள் பிறப்பதற்கிடையிலான இடைவெளி அதிகரிக்கலாம். சராசரி பசுவொன்றின் வேட்கை அறிகுறிகள் வருமாறு:
  • ஏனைய விலங்குகளை தம்மீது தாவ அனுமதித்தல்.
  • ஏனைய விலங்குகளின் மீது தாவல்.
  • பெண் குறி சிவப்பு நிறமாகல், வீங்கல், ஈரமாகக் காணப்படல்.
  • பெண் குறியிலிருந்து எப்போதும் சளியம் வடிதல்.
  • குழப்பமடைந்து காணப்படல்.
  • அடிக்கடி கத்தல் (bellowing).
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  • வாலை உயர்த்தல் - நாம்பனிகளிற்குப் பொருத்தமான ஒரு அறிகுறி.
  • பால் தரும் விலங்குகளின் பால் உற்பத்தி குறைதல்.
  • உணவில் விருப்பமின்மை.

கன்னிக் குட்டிகளை இனப்பெருக்கம் செய்தல்

மண்டல நாடுகளில் பெண் கன்றுகளில் வேட்கை அறிகுறிகள் மிகவும் குறுகிய காலத்திற்கே அதாவது 12 மணித்தியாலங்களிற்கே காணப்படும். எனவே எப்போதும் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும். காலை நேரத்தில் வேட்கை அறிகுறிகளை மிகவும் இலகுவாக அவதானிக்க முடியும். இதுவே வேட்கை அறிகுறிகளை அவதானிப்பதற்குச் சிறந்த காலமாகும். காலையில் வேட்கை அறிகுறிகளை அவதானித்தால் மாலை வேளையில் அவ்விலங்கை இனச்சோக்கையில் ஈடுபடுத்த வேண்டும். வேட்கை அறிகுறிகளை அவதானித்து முதல் 8 மணித்தியாலங்களில் சினைப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் வேட்கை அறிகுறிகளை அவதானித்தால் காலையில் அதனை சினைப்படுத்த வேண்டும். இயற்கையான முறையில் சினைப்படுத்தும் போது வேட்கை அறிகுறிகளை அவதானித்து சிறிது நேரத்திலேயே அதனை காளையின் அருகே கொண்டு செல்ல வேண்டும்.
உரிய உடல் பருமனை அடைய முன்னரே கன்னிப் பசுக்கள் வேட்கை அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். சில சந்தர்ப்பங்களில் அவற்றின் வயது ஒரு வருடங்களாகுவதற்கு முன்னரே இனப்பெருக்கம் செய்தால் பிரசவத்தின் போது பிரச்சினைகள் ஏற்படலாம். கற்பம் தரிப்பதால் வளாச்சி குன்றும் அல்லது முற்றாகவே நின்று விடும். இல்லாவிடில் முதலாவது தடவை கறக்கும் பாலின் அளவு மிகவும் குறையலாம். எனவே நாம்பனின் வயது 18 மாதங்களாகி, போதிய உடற் பருமனை அடைந்த பின்னர், முழுமையான வளாச்சிப் பருமனில் 70 %ஐ அடைந்த பின்னர் இனப்பெருக்கம் செய்தல் மிகவும் உகந்ததாகும்.

சினைப்படுத்தப்பட்ட பசுக்களை பராமரித்தல்

சினைப்படுத்தலை அமைதியான, சுதந்திரமான இடத்தில் மேற்கொள்ள வேண்டும். விலங்கு பாய்ந்து செல்ல முடியாதவாறு அதனைக் கட்டி வைத்தல் வேண்டும். சினைப்படுத்தலிற்கு முன்னரும், பின்னரும் உணவையும், நீரையும் வழங்கி நிழல் உள்ள இடத்தில் விடவும். சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் உயர்ந்த சினைப்படுத்தலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கற்பப் பசுக்கள்

பசுக்களின் காப்பக் காலம் 280 நாட்களாகும். இவை பசுக்களின் வாக்கத்திற்கேற்ப வேறுபடும். பிரசவத்திற்கு 2 மாதங்களிற்கு முன்னர் பால் கறப்பதை நிறுத்த வேண்டும். பால் கறப்பது நிறுத்தப்பட்ட காலத்தில் அதன் உடல் நிறை குறிப்பிட்டளவு அதிகரிக்கும்.
மாட்டுத் தொழுவம்

இலங்கையின் நிலைமைகளிற்கு அமைய பாற்பசுக்களிற்குப் பொருத்தமான பல்வேறு விதமான தொழுவங்கள் முதலாம், இரண்டாம் படங்களில் தரப்பட்டுள்ளன. சிறியளவில் பாற்பசுக்களை வளர்க்கும் விவசாயிகள் அவற்றிற்கு வழங்கும் தொழுவத்தின் இடவசதி போதுமானதல்ல (கூரை, காற்றோட்டம், தளம், இடவசதி, நீர் வடிந்தோடல், சாணத்தை அகற்றல்). தீவனத் தொட்டிகள் ஒழுங்காக இல்லாமையினால் தீவனங்கள் வீணாகும். இங்கு தரப்பட்டுள்ள தொழுவங்கள் ஐரோப்பிய வகையைச் சேர்ந்தனவாகும். எனவே இலங்கையின் நிலைமைக்கு ஏற்ப அவற்றைத் தெரிவுசெய்ய வேண்டும் அல்லது சிறிய மாற்றங்களைச் செய்வது அவசியமாகும். தொழுவங்களை அமைக்கும் போது மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
  1. விலங்குகள் நிற்பதற்குப் போதியளவான இடைவெளி
  2. போதியளவான சுத்தமான நீரை வழங்கல்
  3. தீவனத் தொட்டிகளை வைப்பதற்கு போதியளவான இடவசதி
  4. நிழல் போதியளவில் காப்படல் (உணவு வழங்கும் போதும் / புற்களை மேயும் போதும்)
பிரதானமாக இரண்டு வகையான தொழுவங்கள் உள்ளன.
  1. கட்டி வளாக்கும் தொழுவங்கள்
  2. திறந்த தொழுவங்கள்
விலங்குகளை கட்டி வளர்க்கும் தொழுவங்கள் 
இம்முறையில் அனைத்து பசுக்களும் தூனொன்றில் கட்டி வைக்கப்படுவதோடு, தீவனங்கள் அவற்றிற்கு முன்னால் உள்ள பாத்திரத்தில் வைக்கப்படும். பாலைக் கறக்கும் போது தனித்தனியாக அவ்விடங்களிலேயே மேற்கொள்வதோடு, சாணம் கான்களின் மூலம் சேகரிக்கப்படும்.
இம்முறையிலுள்ள பிரதிகூலங்களாவன
  1. விலங்குகளை நீண்ட காலம் வைத்திருக்கும் போது குழம்புகளில் பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றிற்கு போதியளவான இட வசதி இன்மையால் கால்கள் வீங்கும்.
  2. சில நடவடிக்கைளிற்கு தடை ஏற்படலாம் (வேட்கை அறிகுறிகள்).
  3. மற்றைய விலங்குகளினால் முளைக் காம்புகள் மிதிபடலாம் (அருகிலுள்ள விலங்குகள் அசைவதனால் மிதிபடலாம்).

தொழுவங்களை ஒரு வரிசையில் அல்லது இரு வரிசைகளில் விலங்குகளைக் கட்டி வைக்கக் கூடியவாறு அமைக்கலாம். 2 வரிசைகளில் பசுக்களைக் கட்டும் போது (1) முகத்திற்கு முகம் பார்க்கக் கூடியவாறு (உணவை மத்தியில் வைக்கக் கூடியவாறு), (2) தொழுவத்திலிருந்து வெளியே தெரியக்கூடியவாறு (வாலிற்கு வால் முறை) பாலைக் கறப்பதற்கு மத்திய பாகமும், உணவு இரண்டு பாத்திரங்களில் இரு பக்கங்களிலும் தனித்தனியாக வழங்கப்படும்.
500 – 600 கி.கி உடல் நிறையுடைய பசுவொன்றிற்கு அவசியமான அளவுகள் அட்டவணை 1.1 இல் தரப்பட்டுள்ளன. விலங்குகளின் பருமனிற்கு அமைய வழங்கப்படும் இட வசதி வேறுபடும். தொழுவங்களைப் பிரித்து தனித்தனியான பாகங்களை பசுக்களிற்கு வழங்கலாம். பசுக்களை கட்டி வைக்காத போது ஒரு விலங்கிற்கு வழங்கப்படும் இடத்தை 50 – 100 சதம மீற்றர் வரை அதிகரித்தல் வேண்டும். இரண்டு பசுக்களிற்கு ஒரு நீர் தொட்டி வீதம் வழங்க வேண்டும். மென்மையான படுக்கைப் புற்களை இடுவது பசுக்களிற்கு வசதியாக இருக்கும். இது விலங்குகளை சுத்தம் செய்யவும், குழம்புகளில் ஏற்படும் நோயைத் தவிர்ப்பதற்கும் உதவியாக அமையும். தழுவனத் தொட்டிகளின் அகலம் 0.5 – 0.6 மீற்றர் வரை இருத்தல் வேண்டும். இதன் அடிப்பகுதி கூட்டின் உயரத்தை விட 4 – 5 சதம மீற்றர் அதிகமானதாக இருத்தல் வேண்டும்.
Gutter System
தொழுவத்தின் அகலம்
தொழுவத்தின் நீளம்
Gutter System
1.10 – 1.20
1.55 – 1.65
Stall with covered gutter
1.10 – 1.20
1.45 – 1.55
திறந்தவெளி கூடு

திறந்த வெளி கூட்டினுள் விலங்குகள் கட்டி வைக்கப்படவதில்லை. விலங்குகள் தொழுவத்தினுள் சுயாதீனமாக நடந்து திரியலாம். இம்முறையில் பொதுவாக விலங்குகள் நடப்பதற்கும், அவை படுத்திருப்பதற்கும் தனித்தனியான இடங்கள் வழங்கப்படும். தீவனங்களை வழங்குவதற்கு, பசுக்கள் உறங்கும் இடங்களில் தொட்டிகள் வைக்கப்படும். பரந்த இடத்தில் சாணம் தெறித்து விழுவதால் இதனை சவல் ஒன்றைப் பயன்படுத்தி சேகரித்து கான்களில் அல்லது அதற்கென உள்ள தொட்டியில் இடலாம். ஒவ்வொரு விலங்கிற்கும் தனித்தனியாக உணவுத் தொட்டிகளை வைப்பது முக்கியமாகும்.
திறந்த கூட்டின் அனுகூலங்கள்
  1. பாரம்பரிய முறையை விட உற்பத்திச் செலவு குறைவு.
  2. வேட்கை அறிகுறிகளை இலகுவாக அறியலாம்.
  3. விலங்குகளிற்கு உடற் பயிற்சி கிட்டும்.
  4. சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம்.
திறந்த கூட்டினுள் காணப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்
  1. பாலைக் கறப்பதற்கு, கன்றுகளை உற்பத்தி செய்வதற்கும், கன்றுகளைப் பராமரிப்பதற்கும் தனித்தனியான இட வசதிகள் அவசியமாகும்.
  2. தீவனங்களையும், நீரையும் வழங்கும் இடங்கள், உறங்கும் இடம் என்பனவற்றை ஒழுங்காகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
  3. சுத்தம் செய்வதற்கு வசதியாக தரையை சீமெந்தினால் பூசி விடல் வேண்டும் அல்லது செங்கற்களினால் அமைக்க வேண்டும்.
  4. கான் தொகுதி ஆழமற்றதாகவும், தேவையான போது அகற்றக் கூடியவாறு ஓடு அல்லது சீமெந்துக் கற்களினால் இதனை மூடி வைக்க வேண்டும்.
  5. 10 அடி: 1 அங்குலம் என்ற அளவில் சாய்வு இருக்கத்தக்கவாறு கான் தொகுதியை அமைத்தல் வேண்டும் (ஒவ்வொரு அடிக்கும், ஒரு அங்குல சாய்வு).
  6. கூரையை அஸ்பெஸ்டாஸ் அல்லது தகரத்தினால் அமைக்க வேண்டும்.
அட்டவணை 1. 2 தளமும், தீவனத் தொட்டிலின் நீளமும்
விலங்கின் வகை
தளத்திற்கான நிலப்பரப்பு /விலங்கு
மூடப்பட்ட பிரதேசம் 
(வர்க்க அடி)
திறந்த பிரதேசம் 
(வர்க்க அடி)
ஒரு விலங்கிற்கான தொட்டியின் நீளம் (அங்குலம்)
கன்றுகள்
20 – 30
80 – 100
20 – 24
இளம் விலங்குகள்
15 – 20
50 – 60
15 – 20
காப்பப் பசுக்கள்
100 – 120
180 – 200
24 – 30
காளைகள்
120 – 140
200 – 250
24 – 30

தீவன இறாக்கைகள்

உணவுத் தொட்டில்களை விலங்குகள் படுக்கும் இடத்திலிருந்து வேறுபடுத்தவதற்கு உதவும். பல்வேறு விதமான தீவன இறாக்கைகள் உள்ளன.

தொழுவங்களை அமைத்தல

அயன மண்டலத்தில் பசுக்களிற்கான தொழுவத்தில் குறைந்த வசதிகளை வழங்கினால் போதுமானதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனி ஒரு தூணின் உதவியுடன் குடை போன்று அமைத்தால் போதமானதாகும். தொழுவத்திற்கு வெளியே நடமாடல், இயற்கையான காற்றோட்டம் என்பனவற்றிற்கு விசேடமாக உலர் வலயத்திலுள்ள பசுக்கள் அதிக விருப்பம் கொண்டனவாகக் காணப்படும். தொழுவத்தின் கட்டமைப்பிற்கு மரங்கள் அல்லது இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தலாம். கூரைகளிற்கு அலுமினியம் அல்லது அஸ்பெஸ்டாஸ் போன்ற ஒளித்தெறிக்கக் கூடிய பொருடகளைப் பயன்படுத்துவது உகந்ததாகும். எனினும், அதிகளவான காற்றில்லாத பிரதேசத்தில் வைக்கோல், உலர்ந்த புற்கள் என்பன உகந்தனவாகும். கதிர் வீச்சினால் எற்படக் கூடிய வெப்பத்தினைத் தவிர்ப்பதற்கு கூரைக்குக் கீழே காற்று இடைவெளி இருத்தல் முக்கியமானதாகும்.
பசுக்களைக் கட்டி வைக்கும் தொழுவங்களைத் திட்டமிடல்

இந்த தொழுவங்களின் கூரைகள் இரும்பினால் அமைக்கப்படும். கூரைகளிற்கு கூரைப் பொருட்கள் பயன்படுத்தப்படும். இரட்டை வரிசை தொழுவங்களின் கூரைகளின் அகலம் அதிகமானதால், அவற்றை இணைப்பதற்கான தூண்கள் அவசியமாகும். இயற்கையான காற்றோட்டத்தினை அதிகரிப்பதற்கு திறந்த மூலைகள் இருத்தல் வேண்டும்.
அதிகளவான வெப்பநிலையைக் கொண்ட காலநிலைமையின் கீழ் மேலதிகமான ஜன்னல்களை அமைப்பதனால் காற்றோட்டத்தை அதிகரிக்கலாம். 

திறந்த தொழுவங்களிற்கான திட்டம் 

திறந்த தொழுவங்களிற்கான கூரையை பல வடிவங்களில் அமைத்துக் கொள்ள முடியும். குறைவான மழைபெய்யும் பிரதேசங்களில் சமாந்திரமான கூரை போதுமானதாகும். ஆனால் அதிகளவான மழை பெய்யும் பிரதேசங்களில் கூரை சாய்வாக இருத்தல் அவசியமாகும். விலங்குகள் படுக்கும் பகுதிக்கு சூரிய ஒளி கிடைப்பதற்கும், தொழுவத்தின் உள்ளே உலர்வாக வைத்திருப்பதற்கும் ஏற்ற முறையில் தொழுவங்களை அமைக்க வேண்டுமாயின் அதனை வடக்கு – தெற்கு திசையில் அமைத்தல் வேண்டும். தொழுவத்தை திட்டமிடும் போது காற்றின் வேகத்தையும் மனதிற்கொள்ள வேண்டும்.
பக்கச் சுவர்களின் சிபார்சு செய்யப்பட்ட உயரம் 3 மீற்றாகள் ஆகும். மழை, காற்றின் வேகம், வெப்பநிலை என்பனவற்றைப் பொறுத்து இதனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கைவிடலாம். திறந்த தொழுவங்களின் கான் சீமெந்தினால் அமைக்கப்படுவதோடு, அது சாய்வாகவும் இருத்தல் வேண்டும். சாணத்தை சுரண்டி அகற்றும் தொழுவங்களிற்கு 3 வீத சாய்வு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. கானின் அடிப்பகுதி ஒரு பக்கத்தினை சமதரையாக அமைக்க வேண்டும். போதியளவான நீரை வழங்கவும்.
பாற்பசுக்களைப் பராமரித்தல்

பசுக்களிற்குத் தகைப்பு ஏற்படாத சுற்றாடலில் வைத்தல் வேண்டும். தீவனம், சுற்றாடல் நிலைமைகளில் சிறு மாற்றங்களைச் செய்தல் வேண்டும். இந்நிலைமையின் கீழ் பசுவின் உடல் ஆரோக்கியம், அதிக தடவைகளிற்கு கன்றுகளை ஈணுவதற்கும் வாய்ப்பான நிலைமையை வழங்கும்.
பாற்பசுக்களிற்கு உணவளித்தல்

இது பாலின் விளைச்சல், உடல் நிறை என்பனவற்றில் தங்கியுள்ளது. வன தீவனங்கள், செறியுணவு என்னபவற்றை வழங்க வேண்டும் (இதன் விபரங்கள் பின்னால் தரப்பட்டுள்ளன).
கன்று ஈனலைப் பராமரித்தல் 

கன்று ஈனல், பசு, புதிதாகப் பிறக்கும் குட்டி என்பனவற்றைத் தவிர, விவசாயிக்கும் அதிக வேலையுள்ள ஒரு காலமாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒழுங்காக முகாமைத்துவம் செய்யாத போது குட்டிக்கும், பசுவின் உற்பத்திச் செயற்பாட்டிற்கும் பெரும் பிரச்சினைகள் எழுவதோடு, உயிரரிழப்பதற்கும் வாய்ப்பேற்படலாம். காளையும், பசுவும் இணைந்த தினத்திலிருந்து (Mating) குட்டியீனும் காலத்தை அனுமானிக்கலாம். குட்டியீனும் காலத்தை அண்மிக்கும் போது பால் மடி பெரிதாகல், பெண் குறியிலிருந்து சளியம் வடிவதையும், வீங்கியிருப்பதையும் காணலாம். குட்டியீனுவதற்கான பொதுவான அறிகுறிகள் வருமாறு:
  • பால்மடி வீங்குதலும், பால் காணப்படலும்
  • இடுப்பு இணைங்கள் தளர்வடைதல்
  • வால் உயர்ந்திருத்தல்
  • பெண்குறி சிவப்பு நிறமாதலும், வீங்குதலும்
  • பெண்குறியிலிருந்து சளியம் வடிதல்
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • உணவில் விருப்பமின்மை
  • அசாதாரணமாக ஓய்வின்றி இருத்தல் - அடிக்கடி நிலத்தில் படுத்து எழும்புதல்
குட்டியீனும் தினத்தில் அசௌகரிமாகக் காணப்படும். உட்காரல், எழும்புதல் என்பன கடினமாக காணப்படுவதோடு, நடப்பதற்கும் சிரமப்படும். பெண்குறி வீங்கி, சளியம் வடியத் தொடங்கும். வாலை இரண்டு பக்கமும் ஆட்டிக்கொண்டே மேலே உயர்த்தும். கண்கள் அடிக்கடி பின்னோக்கிப் பார்க்கும். இந்த அறிகுறிகள் பிரசவம் நிகழப் போகின்றது என்பதை உணர்த்தும். குட்டி வெளியே வரும் பாதை வலுவலுப்பாய் இருப்பதற்கு வசதியாக குட்டி வெளியே வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களிற்கு முன்னர் நீருடன் கூடிய பனிக்குடம் (Water bag) வெளியே வரும். கர்ப்பப் பையில் குட்டி காணப்படும் நிலை, பனிக்குடம் வெளியேறி, குட்டியீனும் நிலைகள் கீழேயுள்ள படங்களில் தரப்பட்டுள்ளன.


நீர்க்குடம் வெளியேறியதை அவதானித்து 2 மணித்தியாலங்களிற்கிடையில் குட்டியின் முன் காலிரண்டும் தோன்றல் ஒழுங்கான முறையில் குட்டியீனுவதற்கான அறிகுறியாகும் (படம் 2). இதன் பின்னர் நாசியும், முழு முகமும் ஒரு மணித்தியாலங்களிற்குள் வெளியேறும் (படம் 3). சில நிமடங்களிலேயே நெஞ்சுப் பகுதியும் முழு உடலும் வெளியேறும்.

பால் கறத்தல்

பாற்பசு வளர்ப்பில் பசுவின் பால் உற்பத்திக்கும், இலாபத்திற்கும் நேரடியான தொடர்புள்ளது. கைகளினால் பால் கறப்பதா அல்லது இயந்திரங்களினால் பால் கறப்பதா என்பது தொழிலாளர்களிற்கு ஏற்படும் செலவு, பண்ணையின் அளவு என்பனவற்றினால் தீர்மானிக்கப்படும். பால்மடியின் சுகாதாரம், ஆரோக்கியம், பால் உற்பத்தி என்பனவற்றைக் கருத்திற் கொள்ளும் போது நன்கு பயிற்சிபெற்ற ஒருவர் கையினால் பால் கறப்பதே முக்கியமாகும். பால் கறப்பதற்கான சில பொதுவான ஒழுங்கு விதிகள் வருமாறு:
  • முறையான கால இடைவெளியில் பால் கறத்தல்
  • தொழுவத்தின் உற்பத்தித் திறன், அமைதி என்பனவற்றை பராமரித்தல்
  • விலங்குகளை ஒழுங்காகப் பரிகரிக்க வேண்டும்
  • பால் கறப்பவர் கை சுத்தமாக இருப்பதோடு, நகத்தை கட்டையாக வைத்திருப்பது, சுத்தமான ஆடைகளை அணிந்திருப்பது என்பன அவசியமானவைகளாகும்
  • மிக விரைவாகவும், அனைத்து முலைகளிலும் சம அளவாகவும் பாலை கறக்க வேண்டும்
கைகளினால் பால் கறத்தல் 

மடியை ஆயத்தம் செய்தல் (தூண்டல்)
  1. பால் மடியையும், முலைகளையும் சுத்தம் செய்தல் பால் அசுத்தமடைவதைத் தவிர்க்கும்.
  2. முதலில் கறக்கும் பாலை மடியழற்சி நோய்க்கென பரிசோதித்துப் பார்க்கவும்.
  3. இதனால் பசு பால் கறப்பதற்குத் தூண்டப்படும். விலங்கின் வாலை சுத்தம் செய்தல் முக்கியமானதாகும். வினைத்திறனாக சுத்தம் செய்வதற்கு மடியைச் சுற்றியுள்ள மயிரையும், வாலில் ஒரு பகுதியையும் வெட்டி விடல் அவசியமாகும். மடியைக் கழுவிய பின்னர் அதனை உலர்ந்த துணியினால் துடைத்து உலர்வாக வைத்திருக்கவும்.
முதலில் பாலை பரிசோதிக்க வேண்டும். இதற்கு முதலில் பால் கோப்பை அவசியமாகும். இக்கோப்பையை கறுப்பு துணியால் மூடவும். முதலில் கறக்கும் பாலை இந்த துணியின் ஊடாக கோப்பையில் விழச் செய்யவும். இதனால் பசுவிற்கு மடியழற்சி நோய் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும். மடியழற்சி ஏற்பட்டிருக்குமாயின் வெண்ணிறமான பாற் கட்டிகள் துணியில் விழுந்திருப்பதை அவதானிக்கலாம். இதற்கு பரிகாரமளிக்க ஒரு மிருக வைத்தியரை நாடவும். மேற்குறிப்பிட்ட அறிகுறி காணப்படுமாயின் முழு பாலையும் கறந்த பின் அதனை பாதுகாப்பாக அகற்றுவதன் மூலம் இந்நோய் ஏனைய பசுக்களிற்குப் பரவுவதைத் தடுக்க முடியும்.
மடியைக் கழுவல், ஆரம்பப் பாலை பரிசோதித்தல் என்பன பசு பாலைக் கறக்கத் தூண்டப்படும். சத்தம் (வாளியின்), பால் கறப்பவரைக் காணல், குட்டியைக் காணல், சிறிதளவான சுடு நீரில் மடியைக் கழுவுதல் என்பனவற்றின் மூலம் பால் சுரக்கப்படுவதைத் தூண்ட முடியும். பசு தூண்டப்பட்டவுடன் ஒக்சிடொசின் ஹோமோன் (Oxytocin) விடுவிக்கப்படும். பால் கறப்பவர் 5 – 6 நிமிடங்களில் பாலைக் கறக்க வேண்டும்.
கையால் பால் கறக்கும் முறைகள்
  1. முழுமையான கை முறை 
    இங்கு முழுக் கையையும் பயன்படுத்தி பால் கறக்கப்படுவதோடு, காம்பின் மேல் பக்கத்தில் ஆட்காட்டி விரலால் நசிப்பதோடு, ஏனைய விரல்களால் முலையின் மேலிருந்து கீழாக நசிக்கப்படும.
  2. Stripping 
    ஆட்காட்டி விரலையும், பெரு விரலையும் பயன்படுத்தி மேலிருந்து, கீழாக நசித்தல்
  3. Pinching 
    இதுவும் மேற்குறிப்பிட்டவாறே மேற்கொள்ளப்படுவதோடு, இரண்டாவது, மூன்றாவது விரல்கள் இதற்குப் பயன்படும்.
  4. Knuckling 
    இதில் பெருவிரலை மடித்துக் கொண்டு, ஏனைய விரல்களை பெருவிரலின் மீது வைத்து நசிப்பதாகும்.

மிகவும் சிறப்பானது முழுக்கையையும் பயன்படுத்தி, ஒழுங்கு முறையாக பால் கறப்பதாகும். இதனால் அதிகளவான பால் சுரக்கப்படும். மிகக் குறுகிய காலத்திலேயே பால் கறப்பதைப் பூர்த்தி செய்ய முடியும். இங்கு முலைகள் மெதுவாகவே இழுக்கப்படும். கைகளினால் நன்றாகக் கறக்கும் போது பால் சுரக்கும் வேகம் உகந்ததாகக் காணப்படும். மோசமாகப் பால் கறக்கும் போது பால் விடுவிக்கப்படல் தடைப்படும். குறுகிய நீளமுள்ள காம்புகளிற்கு முழுமையான கை முறை சற்று சிரமமானதாகும்.
கையால் பால் கறக்கும் ஒழுங்குமுறை
  1. பின்னங் கால்களை கட்டி வைக்கவும். இது புதிதாகக் கறக்கும் பசுக்களிற்கும், பழக்கப்படாத பசுக்களிற்கும் மிக முக்கியமாகும். இல்லாவிடில் பால் வாளியை பசு தட்டி விடும்
  2. சவர்க்காரத்தினால் கைகளை கழுவவும
  3. பால் மடியையும், வாலையும் மிகவும் கவனமாகச் சுத்தமாக கழுவவும்
  4. முதலில் பாலைப் பரிசோதிக்கவும்
  5. பசுவின் வலது பக்கமாக அமரவும
  6. முன்னால் உள்ள காம்புகளிற்கு கீழே வாளியை வைத்து பாலைக் கறக்கவும
  7. பால் கறப்பதை முதலிரண்டு காம்புகளில் ஆரம்பிக்வும். முதல் காம்பு வெறுமையாகியதும், பின்னாலுள்ள காம்புகளிலிருந்து பாலைக் கறக்கவும் (முன்னால் உள்ள காம்புகள், பின்னால் உள்ள காம்புகள் என்பனவற்றில் பால் காணப்படும் விகிதம் வருமாறு 40 : 60)
  8. பாலைக் கறந்து முடிந்ததும் காம்புகளை போமிக் அமிலம் அல்லது சிற்றிக் அமிலத்தில் தோய்க்கவும்


இயந்திரங்களின் மூலம் பால் கறத்தல் 
இதில் பிரதானமாக இரண்டு முறைகள் உள்ளன.
பாலைப் பாத்திரத்தில் கறத்தல் (மாட்டுத் தொழுவத்திலேயே) 
இயந்திரங்களின் மூலம் பால் கறப்பதில் இதுவே மிகவும் எளிமையானதொரு முறையாகும். தற்போது தென் ஆசியாவில் இதுவே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. பாத்திரத்தில் பாலைக் கறக்கும் இயந்திரத்தின் பிரதான பாகங்கள் கீழே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளன. இங்கு பெயரிடப்பட்ட பாகங்களைத் தவிர அமுக்க அகற்றி (Vacum) அலகு (மோட்டார், பம்பி, அமுக்கமகற்றும் தாங்கி), அமுக்கமிழக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் பாகம், வெகும்மானி என்பன அவசியமாகும். கிளஸ்டரிலிருந்து (Cluster) நேரடியாக நீண்ட பாற்குழாயினூடாக வாளியை பால் அடையும். வாளியின் கொள்ளளவு 20 லீற்றாகள் ஆகும். பாத்திரம் நிரம்பிய பின்னர் அதிலுள்ள பாலை அகற்ற வேண்டும். அத்துடன் அமுக்கமகற்றியையும் விடுவித்தல் வேண்டும். இம்முறை சிறிய பாற் பண்ணைகளிலும், புதிதாக குட்டி ஈன்ற பண்ணைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.



இயந்திரங்களின் மூலம் பால் கறத்தல் (மாட்டுத் தொழுவத்தில் அல்லது கறக்கும் இடத்தில்) பாற்பண்ணை பெரியதாயின் அடிக்கடி பாத்திரத்தை வெறுமையாக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். இச்சிரமமான செயலைத் தவிர்ப்பதற்காக சில விவசாயிகள் குழாய் தொகுதியொன்றைப் பொருத்த அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.

பால் கறக்கும் கால இடைவெளி

இரண்டு தடவைகள் பால் கறப்பதற்கிடையே 16 மணித்தியாலங்களிற்கு மேல் இடைவெளி காணப்படும் போது பால் சுரக்கப்படுவது நிரோதிக்கப்படும். எனவே உச்ச அளவான விளைச்சலைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு நாளில் இரண்டு தடவைகள் பால் கறக்க வேண்டும். நாளொன்றில் இரண்டு தடவைகள் பால் கறப்பதை விட மூன்று தடவைகள் பால் கறக்கும் போது பால் உற்பத்தி 9 – 15 வீதம் வரை அதிகரிக்கும்.
நாளொன்றில் ஒரு தடவை மாத்திரம் பால் கறக்கும் போது நாளாந்த பால் உற்பத்தியும், பாற் காலத்திலுள்ள மொத்த உற்பத்தியும குறையும். புதிதாக குட்டி ஈன்ற பசுக்களிற்கு இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அரிதாக ஒரு தடவை பாலைக் கறக்கத் தவறும் போது குறைவான தாக்கமே ஏற்படும். இந்நிலை 2 – 3 நாட்களில் இல்லாமற் போய்விடும்.
பால் கறக்கும் ஒழுங்குமுறை 
முதலாவதாக முதன் முறையாக பால் கறக்கும் விலங்குகள், அதனையடுத்து மடியழற்சி நோய் ஏற்படாத விலங்குகள், தொடர்ந்து ஏற்கனவே மடியழற்சியினால் பாதிக்கப்பட்டிருந்த விலங்குகள், இறுதியாக மடியழற்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குகள் என சந்தேகிக்கப்படும் விலங்குகள் ஆகிய ஒழுங்குகளில் பாலைக் கறக்க வேண்டும்.

உணவும், போசாக்கும்

தீவனமொன்றில் அடங்கியுள்ள போசணை உள்ளடக்கங்களின் அளவிற்கேற்பவே அதன் போசணைப் பெறுமானம் பொதுவாகக் கணிப்பிடப்படும். பொதுவாக தீவனங்களை வன் தீவனம், செறியுணவு என வகைப்படுத்தலாம். வன் தீவனங்களாக புற்கள் (இயற்கையானவை, மேம்படுத்தப்பட்டவை), நிலத்தில் படாந்து வளரும் புற்கள் (உதா: சிராட்ரோ, சென்ரோ), அவரைத் தாவரங்கள் (உதா: கிளிறிசிடியா, இப்பில் இப்பில்), அவரை இனங்கள் அல்லாத தாவரங்கள் (உதா பலா, மா), மரங்களும், பற்றைகளும், விவசாயக் கழிவுகள் (வைக்கோல்), விவசாய கைத்தொழிலின் உப விளைவுப் பொருட்கள் (சோயா தோல், Baggase) என்பனவற்றைக் குறிப்பிடலாம். தேங்காய் பிண்ணாக்கு, அரிசித்தவிடு, தானியங்கள் என்பனவற்றை செறியுணவுகளாகப் பயன்படுத்தலாம்.

உணவுப் பங்கீடு
விலங்கொன்றின் நாளாந்த போசணைத் தேவைக்கு அமைய உணவுப் பங்கீடு வேறுபடுவதோடு, ஒரு கிலோ கிராம் உணவினால் வழங்கப்படும் போசணை அளவை, முழுமையாகத் தேவைப்படும் போசணையின் அளவினால் வகுக்கும் போது நாளொன்றிற்கு அவசியமான உணவின் அளவைத் தீர்மானிக்கலாம். பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உணவு வகைகள் ஒன்றாகக் கலக்கப்பட்டு தீவனங்கள் தயாரிக்கப்படுகின்றன. மிகவும் தரமான மூலப்பொருட்களினால் தயாரிக்கப்பட்டுள்ள தீவனமொன்றை தெரிவு செய்வது முகாமையாளரினால் மேற்கொள்ள வேண்டும். இது போசணையின் அளவு, கிடைக்கும் தன்மை, விலை, செலவு ஆகியவற்றில் தங்கியுள்ளது.

வளரும் விலங்குகளிற்கான உணவு

குட்டிகள், நாம்பன் என்பனவற்றிற்கு உணவளிப்பதற்கு அவசியமான வழிகாட்டிகள் அட்டவணை 10.5 இல் தரப்பட்டுள்ளது. எளிமையான முறையில் தீவனங்கள் வன் தீவனங்கள், செறியுணவு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தமது பிரதேசத்தில் பரவலாகக் காணப்படும் பல்வேறு தீவனங்களிடையே அவசியமானவற்றை முகாமையாளரின் விருப்பிற்கமைய தெரிவு செய்து கொள்ள முடியும்.
மனதிற் கொள்ள வேண்டிய சில விடயங்கள்
  1. சிறிய விலங்குகள் (முதலாவது வாரத்தினுள்) 
    உலர் புற்கள், புற்கள், செறியுணவு என்பனவற்றின் அளவை படிப்படியாக அதிகரித்தல் வேண்டும். பொதுவாக தரமான 30 கிராம் உலர் புல் அல்லது 50 கிராம் பச்சைப் புல்லுடன் 30 கிராம் கால்வ் ஸ்ராட்டா (Calf starter) அல்லது 50 கிராம் செறியுணவை வழங்க வேண்டும்.
  2. முதலாவது இரண்டாவது மாதங்களில் 
    பாலை மறக்கடிக்கச் செய்யும் போது விலங்கின் நிறை பிறப்பு நிறையைப் போன்று இரண்டு மடங்காக அதிகரித்தல் வேண்டும். 3 மாதங்களாகியதும் பாலூட்டுவதை முற்றாக நிறுத்த வேண்டும். 3வது வாரம், 3வது மாதம், 6வது மாதம், 9வது மாதம், 12வது மாதம் என்பனவற்றின் போது புழுக்களிற்கு மருந்து வழங்க வேண்டும். குட்டிகளில் உண்ணிகள் காணப்படுமாயின், குட்டி, தாய்ப்பசு ஆகிய இரண்டிற்கும் பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். மருந்து வழங்கப்படும் அளவு, முறை என்பன மருந்தின் வகையில் தங்கியுள்ளது.
  3. 7 – 9 மாதங்களிற்கிடையில் 
    முதல் 9 மாதங்களில் மிக உகந்த அளவிலான உடல் வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள குட்டிக்கு உயர் தரமான உணவுகள், கனிப்பொருட்கள், விட்டமின், நீர் என்பனவற்றை வழங்க வேண்டும். வளர்ச்சி வேகம் அல்லது உடல் நிறை முதல் 9 மாதங்களில் விரைவுபடுத்தப்படுவதோடு, அதன் பின்னர் வளர்ச்சி வேகம் குறைவாகவே காணப்படும்.
  4. 16 – 18 மாதங்களிற்கிடையில் 
    இரண்டாவது உணவு பங்கீட்டிற்கு அமைய அதிகளவான நார்பொருட்களை வழங்குவதன் மூலம் செறியுணவு வழங்கப்படும் அளவு, உணவிற்கு ஏற்படும் செலவு என்பனவற்றைக் குறைக்க முடியும். எனினும், அதிகளவான நார் பொருட்களைப் பெற்றுக்கொள்வது சிரமமாயின் நிறைவான தரமான செறியுணவுகளை வழங்கவேண்டும். அட்டவணை 10.5 தரப்பட்டுள்ளவாறு உணவுகளை குட்டியிலிருந்து, குட்டியீனும் வரை வழங்க முடியுமாயின் 13 – 18 மாதங்களிற்கிடையே கன்றுகள் முதலாவது தடவையாக வேட்கை அறிகுறிகளைக் காட்டும் (உடல் நிறை வளர்ச்சியடைந்த விலங்குகளின் 60 வீதம் வரையாகும்).
பால் தரும் விலங்குகளிற்கான உணவு

பால் தரும் விலங்குகளிற்கு உணவைத் தயாரிக்கும் போது உடல் பராமரிப்பிற்கும் (உடல் நிறையில் தங்கியுள்ளது), பால் உற்பத்திக்கும் (பால் விளைச்சல், கொழுப்பின் அளவு) அவசியமான போசணை அளவைக் கவனத்திற்கொள்ள வேண்டும். இதனைத் தவிர உணவிலுள்ள விலங்குகளினால் பெறக்கூடிய போசணைப் பொருட்களையிட்டும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அட்டவணை 10.1, 10.2 என்பனவற்றிலுள்ள தகவல்கள் முக்கியமானவையாகும்.
உணவு வகைகளைத் தெரிவு செய்தல், விகிதாசாரத்திற்கேற்ப அவற்றைக் கலவை செய்தல், அந்த உணவுகளை இயலுமான வரை குறைந்தளவான செலவுடன் விலங்குகளிற்கு அவசியமான போசணைகளைப் பெறக் கூடியவாறு வழங்கல் ஆகிய காரணிகளில் உணவுகளைத் தயாரிப்பது தங்கியுள்ளது. எனவே கலவை உணவகளைத் தயாரிப்பதற்கு உணவுகள் கிடைக்கும் தன்மை, விலை, உணவுகளின் உள்ளடக்கம் என்பன தொடர்பான அறிவு அவசியமாகும்.
பால் தரும் பசுக்களிற்கான உணவுப் பங்கீட்டிற்கு ஒரு உதாரணம்

350 கிலோ கிராம் நிறையுள்ள காப்ப பசுவொன்று 3.7% பாற்கொழுப்புடன் நாளொன்றில் எட்டு லீற்றரை உற்பத்தி செய்கின்றது என்னும் எடுகோளை அடிப்படையாகக் கொள்ளவும். விவசாயி ஒருவரிடம் கினிப் புல் (ஒரு மாத வயதுடையது), தேங்காய் பிண்ணாக்கு, மேலதிகமாக யூறியா மொலாசஸ் கனிப்பொருட் கலவை என்பன காணப்படுமாயின் அவர் தனது பசுவிற்கான தீவனத்தை தயாரித்துக்கொள்ள முடியும்.
முதலாவது படி

அட்டவணை 10.3 இற்கு அமைய TDN, DCP என்பனவற்றின் தேவைகளை கணிப்பிடவும். பாற்கொழுப்பு 3.7%, பால் உற்பத்தி 8 லீற்றா, 300 கிலோ கிராம் நிறையுடைய பசுவிற்குத் தேவையான TDN, DCP என்பன முறையே 6,100, 900 ஆகும் (அட்டவணை 10.3). வளாச்சியடையும் ஒவ்வொரு 50 கிலோ கிராமிற்கும் மேலதிகமாக தேவைப்படும் TDN, DCP என்பன முறையே +300, +25 ஆகும். எனவே 350 கிலோ கிராம் நிறையுடைய பசுவிற்குத் தேவையான TDN அளவு 6400 கிராம் ஆகும். DCP இன் அளவு 925 கிராம் ஆகும்.
இரண்டாவது படி 

உங்களிடமுள்ள தீவனங்களின் போசணைப் பெறுமானங்களை அட்டவணை 10.4ஐப் பயன்படுத்தி கணிப்பிடவும்.
மூன்றாவது படி 

தீவனப் பங்கீட்டினைத் தயாரித்தல் 

TDN (கிராம்)
DCP(கிராம்)
கினி புல்
116
19
கிளிறிசிடியா
142
50
தேங்காய் பிண்ணாக்கு
683
148
யூறியா மொலாசஸ் பல் போசணைக் கலவை
764
46


விலங்கு பெற்றுக் கொண்ட
TDN (கிராம்)
DCP (கிராம்) உலர் பொருள் நிறை 
(கிலோ கிராம்)
மேயும் அல்லது வெட்டி வழங்கப் 
படும் கினி புல் 40 கிலோ
8.4
4640
760
கிளிறிசிடியா 3 கி.கி
0.7
426
150
புற்களின் மூலம் பெறப்படுவன
9.1
5066
910

குறிப்பு 
  1. 350 கிலோ கிராம் உடல் நிறையுடைய பசுவொன்று தனது உடல் நிறையில் ஆகக் கூடியது 3%ஐ மாத்திரமே உலா உணவாக உட்கொள்ளும். அந்த அளவு 10.5 கி.கி ஆகும். கிளிறிசிடியா, புல் என்பனவற்றிலிருந்து மொத்தமாக 9.1 கிலோ கிராமை மாத்திரமே பெறுவதால், பெறக்கூடிய மீதி உலர் நிறை 1.4 கி.கி ஆகும். அசையூன் வயிற்றில் நார் உணவுகளை வழங்குவதற்கு மாத்திரமே இக்கட்டுப்பாடு உள்ளது. உயர் தரமான யூரியா மொலாசஸ் பல போசணைக் கலவையை வழங்கும் போது பசு மேற்குறிப்பிட்ட அளவைப் போன்று மூன்றில் இரண்டு மடங்கை உண்ண முடியும்.
  2. தேவையான 1334 கிராம் TDN (6400 – 5066)ஐ வழங்குவதற்கு மேற்குறிப்பிட்ட தீவனத்துடன் மூன்றாவது போசணை உள்ளடக்கத்தினையும் வழங்க வேண்டும். அசையூன் வயிற்றின் இடவசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தேங்காய் பிண்ணாக்கு அல்லது யூறியா மொலாசஸ் பல போசணைக் கலவை (UMM) போன்ற செறியுணவை வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் இங்கு குறிப்பிட்ட விவசாயிக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.
  3. புற்கள், கிளிறிசிடியா என்பனவற்றினால் தேவையான DCP வழங்கப்படும்.
மூன்றாவது படி

அவசியமான 1334 கிராம் TDNஐ வழங்குவதற்கு

A. 1334/683 = தேங்காய் பிண்ணாக்கு 1.93 கிலோ கிராம் அல்லது 
B. 1334/784 = யூறியா மொலாசஸ் பல போசணைக் கலவை (UMM) 1.75 கிலோ கிராம்
இறுதி அம்சம் பொருளாதார பயனைக் கருத்திற் கொள்வதாகும். தேங்காய் பிண்ணாக்கு அல்லது யூறியா மொலாசஸ் பல போசணைக் கலவையைப் பயன்படுத்துவது மாவட்டம் அல்லது மாகாணத்திற்கு அமைய செல்வாக்குச் செலுத்தும். இங்கு தரப்பட்டுள்ளது ஒரு உதாரணம் மாத்திரமேயாகும். உண்மையான நிலைமையின் கீழ் ஒரு விவசாயி பண்ணைக்கு அண்மையில் உள்ள பல்வேறு வகையான தீவனங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பசுக்களைப் பாதிக்கும் நோய்களும், ஏனைய பாதிப்புகளும்

நோய்
நோய் அறிகுறி
தடுத்தல்
பரிகரணம்
வட்டப் புழு 
(பெரியன)
குட்டிகளை மாத்திரம் பாதிக்கும். வளர்ச்சி குறையும், உணவுக் கால்வாய் தடைப்படும்
கிரமமாகப் புழுக்களை அழித்தல்
கிரமமாகப் புழுக்களை அழித்தல் (உதா: பிப்பரசின்)
வட்டப் புழு 
(பெரியன)
இரத்தச்சோகை, உணவில் விருப்பமின்மை, வயிறு வீங்கல்
கிரமமாகப் புழுக்களை அழித்தல், தீவனங்கள் மிதிபடுவதைத் தவிர்த்தல், சுத்தம்
கிரமமாகப் புழுக்களை அழித்தல் (உதா: நில்வோம்)
பெபிசியாவ (சிவப்பு நிறமான சிறுநீர் வெளியேறல்)
அதிகளவான காய்ச்சல், குருதி கலந்த சிறுநீர் வெளியேறல், உண்ணாதிருத்தல்
ஈக்கள், உன்னிகளைக் கட்டுப்படுத்தல்
முற் காப்பு 
(உதா: பெரனில், டெடராசைக்ளின்
கால், வாய் நோய் (FMD)
வாய், குழம்பு, முலைக் காம்பு என்பனவற்றில் காயமேற்படல், உண்ணாதிருத்தல்
தொடர்ச்சியாக ஆறு மாதங்களிற்கொரு தடவை தடுப்பூசியை வழங்கல்
பரிகரணம் இல்லை. காயங்களிற்கும், காய்ச்சலிற்கும் நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
குருதிப்போக்கு
haemomorrhagic Septicaemia (HS)
அதிக வெப்பம், சுவாசித்தல் கடினம், எச்சில் வடியும்
தொடர்ச்சியாக ஆறு மாதங்களிற்கொரு தடவை தடுப்பூசியை வழங்கல். ஆரோக்கியமான விலங்குகளிடமிருந்து தனிமைப்படுத்தல்
உதா: டெட்ராசைக்ளின் ஐப் பயன்படுத்தவும்
சயரோகம்
பல்வேறு விதமானது. இருமல் அல்லது மூச்சிழுப்பு, வயிற்றோட்டம்
நோயுற்ற விலங்குகளை அழித்தல்
இல்லை
நிவ்மோனியா
HS ஐ ஒத்தது.
குளிர் காற்றிலிருந்து பாதுகாக்கவும்
டெட்ராசைக்ளின் ஐப் பயன்படுத்தவும்
அந்ரக்ஸ்
அதிகளவான காய்ச்சல், சுவாசித்தல் கடினம், சடுதியான இறப்புகள், வாயிலிருந்தும், குதத்திலிருந்தும் குருதி வெளியேறல்
வருடாந்தம் தடுப்பு மருந்துகளை வழங்கல், தொழுவத்திலுள்ள ஏனைய விலங்குகளிற்கு அதிக செறிவில் பெனிசிலின் அல்லது டெடராசைக்கிளினை வழங்கல், இறந்த பின்னர் விலங்கை வெட்டிப்பார்க்க வேண்டாம்
முன்னரே அறியா விடில் பரிகரணம் இல்லை.
அந்ரக்ஸ்
அதிகளவான காய்ச்சல், பாதங்கள் வீங்கல, தோலிற்கு கீழ் வளி நிரம்பல், சுவாசித்தல் கடினம்
வருடாந்தம் தடுப்பு மருந்துகளை வழங்கல், தொழுவத்திலுள்ள ஏனைய விலங்குகளிற்கு அதிக செறிவில் பெனிசிலின் அல்லது டெடராசைக்கிளினை வழங்கல், இறந்த பின்னர் விலங்கை வெட்டிப்பார்க்க வேண்டாம்
முன்னரே அறியா விடில் பரிகரணம் இல்லை.
வலிப்பு
தாடைகள் கடினமாதல், வாயைத் திறத்தல், வாலை ஆட்டல் என்பன சிரமமாகக் காணப்படும்
புதிதாகப் பிறந்த குட்டிகளின் தொப்புள் கொடியை தொற்றுநீக்கம் செய்தல், சிறந்த ஆரோக்கியத்தைப் பேணல், இறந்த விலங்குகளை உடனடியாக புதைக்கவும்
பெனிசிலின் வழங்கவும்
Rinderpest
காய்ச்சல், வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் சளியம் வடிதல், உண்ணாதிருத்தல், இருமல், வயிற்றோட்டம், வாய், மூக்கு, நாக்கு என்பனவற்றில் காயம்
6 மாதங்களிலும், வளாந்த பின்னரும் தடுப்பூசி வழங்கல்
பரிகரணங்களிற்கு தூண்டற்பேறில்லை
காப்பச் சிதைவு (Brucellosis)
5 -6 மாதங்களில் கருச்சிதைவு, கொப்புள் நாண் தடைப்படல், அல்லது அறிகுறி இல்லை.
6 மாதங்களில் தடுப்பூசி வழங்கல், முளையத்தைப் புதைத்தல், நோயுற்ற விலங்கை அழித்தல் பாலைத் தொற்றுநீக்கம் செய்தல்
பரிகரணம் இல்லை. அதிகளவான செறிவில் டெட்டராசைக்ளினை வழங்கல்
சூல்வித்தகம் தங்கி நிற்றல் 
Retained Placenta 
(Retained after birth)
கொப்புள் நாண் மீதமாக இருத்தல், குட்டி ஈன்ற பின்னர் துர்நாற்றம் வீசல்
குட்டியீனும் போது போதியளவான போசணைகளை வழங்கல், ஆரோக்கியம், குட்டியீனும் போது உதவல், குட்டிக்கு தாய்ப்பாலை வழங்கல்
நுண்ணுயிர்க் கொல்லிகளினால் பரிகரித்தல் 
உதா: சல்பா, டெட்ராசைக்ளின் 
அவசியமாயின் கொப்புள் நாணை அகற்றல்
பாற் காய்ச்சல்
நடத்தல் கடினமானதாயிருக்கும் 3 சந்தர்ப்பங்களில் 
1. தள்ளாடி, தள்ளாடி 
அமர்தல் 
2. நெஞ்சு நிலத்தில் 
படக் கூடியவாறு 
அமர்தல் 
3. ஒரு பக்கமாகவும், எவ்விதமான அசைவும் இல்லாதிருத்தல் 
காரணம் : குருதியில் Ca இன் அளவு குறைவாக இருத்தல்
மீண்டும் பழைய நிலைமைக்கு வர முன்னர் பால் கறத்தலை நிறுத்தல், 
அறிகுறிகளை அவதானித்தவுடன் Ca தடுப்பூசியை வழங்கல் 
பொதுவான ஒன்று போதுமானதாகும்.
கல்சியம் குளுகோனேட் தடுப்பூசி 
உலா காலத்தில் அதிகளவான கல்சியத்தினை வழங்குவதைத் தவிர்த்தல்
Ketosis
காபோவைதரேற்று அனுசேபத்தில் பிரச்சினைகள், குட்டி ஈன்ற பின்னர் பசு பலவீனமடைதல், பொதுவாக அதிக உற்பத்தியைக் கொண்ட அல்லது பருத்த பசுவில் காணப்படும்
குட்டி ஈனும் சந்தர்ப்பத்தில் அதிகளவு பருக்கவிட வேண்டாம்
சாதாரண நிலையை அடையும் வரை குளுக்கோசு வழங்கல் தேவையாயின் செறியுணவகளை வழங்கல்
மடியழற்சி
மடி வீங்கல், மங்கிய நிறமுள்ள பால், பாற் கட்டிகள் காணப்படல், உண்ணாதிருத்தல்
சுத்தமான தொழுவம், முறையாகப் பால் கறத்தல், முழுமையாகப் பால் கறத்தல், குட்டிக்கு பாலை வழங்கல், தொற்று நீக்கியினால் காம்புகளை கழுவுதல்
மடியை சுத்தம் செய்து நோயுள்ள காம்பிலிருந்து 2 – 3 தடவைகள் பால் கறத்தல், உப்பு, சுடுநீர் என்பனவற்றினால் மடியைக் கழுவுதல், தடுப்பூசி வழங்கல்
Naval ui
உண்ணாதிருத்தல், சிறுநீர் வெளியேறும் போது வலி, இடுப்புப்பகுதி வீங்கல்
பிறக்கும் போது இடுப்புப் பகுதியை தொற்றுநீக்கம் செய்தல்
கிருமிநாசினிகளினால் சுத்தம் செய்தல், புழுக்களை அகற்றல், மருந்து பூசல்
வட்டப் புழு 
Ring worm
தோலில் உலர்ந்த வளையமான பிரதேசங்கள்
சுத்தமான தொழுவம், நோயுற்ற விலங்குகளைத் தனிமைப்படுத்தல்
அயடின் அல்லது வேறு கிருமிநாசினிகளினால் தொற்றுநீக்கம் செய்தல்
வயிறூதல்
உண்ணாதிருத்தல், அசையூன் வயிறு தடிப்படைந்து, வீங்கல், அசைபோடல் நிறுத்தல், கீழே விழுவதோடு, சடுதியான இறப்பு
இளம் தாவரங்களை அதிகளவில் வழங்கக் கூடாது, (பசுமையான அவரைத் தாவரங்கள் ஆபத்ததானவையாகும்), பச்சை உணவை வழங்க முன்னர் உலர் உணவை வழங்கல்
ஓட விடல், கத்தியால் அல்லது “ட்றோகா” மூலம் அசையூன் வயிற்றில் துளையிடல்
ஜோன் நோய்
துர்மணம் வீசும் வயிற்றோட்டம், பரிகரணங்களிற்கு தூண்டற்பேறில்லை. பசு மெலியும்
நோயுற்ற விலங்குகளைத் தனிமைப்படுத்தல். நோயால் பாதிக்கப்பட்ட பண்ணையில் தடுப்புக் காப்பினை மேற்கொள்ளல், நோயுற்ற விலங்குகளை அழித்தல்
பரிகரணம் இல்லை
பசு விசர் நோய்
கட்டுப்படுத்துவது கடினமானதாகும். ஆக்கிரமிப்பத் தன்மை, படிப்படியாக பாரிசவாதம், இறப்பு
காவிகளைக் கட்டுப்படுத்தல், தடுப்பூசி வழங்கல்
பரிகரணம் இல்லை

அறிக்கைகளைப் பேணலும், பொருளாதார மதிப்பீடும்
பொருளாதார மதிப்பீடு என்றால் என்ன? 
வர்த்தகத்தில் அல்லது தொழில் முயற்சியில் நிதி முகாமைத்துவம் மிக முக்கியமானதொரு அம்சமாகும். இது தொழிலின் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொள்ளவும், காலத்திற்குக் காலம் மாற்றங்களைச் செய்வதற்கும், அவற்றை எக்காலப் பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவினையும் வழங்கும். முன்மொழியப்பட்ட முதலீட்டின் வெற்றி, தோல்வி என்பன தொடர்பாக அம் முதலீட்டினை மேற்கொள்வதற்கு முன்னர் தத்துவங்களின் (கருதுகோள்களின்) அடிப்படையில் தரவுகளைச் சேகரித்து, அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைவதற்கு இலகுவான, வினைத்திறனான உபாய மார்க்கமொன்று தெரிவு செய்யப்படும். தொழிலை ஆரம்பித்த பின்னரும் காலத்திற்குக் காலம் பொருளாதார மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். பொதுவான ஆண்டறிக்கைகளை பரிசோதித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொருளாதார மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படும் அறிக்கைகளின் பயன்கள்
  1. தேவையான போது தொழில் எத்திசையை நோக்கிச் செல்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
  2. தொழிலில் இலாபம் கிடைக்கின்றதா அல்லது நட்டமடைகின்றதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
  3. எதிர்காலத்திற்கு அவசியமான முக்கிய தீர்வுகளை மேற்கொள்ள உதவும்.
  4. தேவையான சந்தர்ப்பங்களில் வருமான வரி, ஏனைய வரிகளைச் செலுத்த உதவும்.
  5. வங்கிக் கடனைப் பெற்றுக்கொள்ளும் போது தேவையான தரவுகளை வழங்குவதற்கு.
  6. இலகுவாகத் தீத்மானங்களை மேற்கொள்வதற்கு.
பொருளாதார மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தக் கூடிய அறிக்கைகள்
  • சொத்துகளும், பொறுப்புகளும்
  • கடன் கணக்கு
  • உற்பத்திப் பதிவு
  • மூலதனக் கணக்கு
  • விற்பனை அறிக்கையும், கணக்கும்
  • பண்ணையிலுள்ள பொருட்களின் பட்டியல்

இலாபத்தை மதிப்பிடல்

ஒரு தொழில் முயற்சியிலிருந்து பெறப்படும் அனைத்து செலவுகளையும், மொத்த வருமானத்திலிருந்து கழிக்கும் போது பெறப்படும் பெறுமானமே இலாபம் ஆகும். பொதுவாக தொழிலை ஆரம்பிக்கும் போது இலாபத்தை மதிப்பிடல் இடம்பெறும். இதனால் தொழிலை மேற்கொள்வதற்கான பருமட்டான சில விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள உதவும். இதற்கமைய சந்தையில் தற்போது நிலவும் விலைகளை அடிப்படையாகக் கொண்டும், சந்தைக் கட்டமைப்பில் பெரும் வேறுபாடுகள் எதுவும் எற்படாது என்னும் எடுகோளில், எதிர்காலத்தில் தமது தொழில் முயற்சியிலிருந்து பெறப்படும் இலாபம் கணிப்பிடப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழிலிற்கு அவசியமான உள்ளீடுகள் எவை? அவற்றை எக்காலப் பகுதியில் பெற்றுக்கொள்ள வேண்டும், விளைபொருட்களை எவ்வாறு சந்தைக்கு அனுப்பவேண்டும், எக்காலப் பகுதியில் சந்தைக்கு விநியோகிக்க வேண்டும் என்பன தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.

  1. ஒரு ஏக்கரிலிருந்து பெறப்படும் விளைவு 
    பொதுவாக விளைச்சல் காலநிலைமைகளில் பெருமளவில் தங்கியுள்ளதால், வருடாந்தம் அது வேறுபடலாம். இதனால், விவசாயி தனது விளைச்சலை நாட்டின் சராசரி விளைச்சலுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். அதாவது தனது தோட்டத்திலிருந்து பெறப்பட்ட விளைச்சல், தேசிய சராசரி விளைச்சலுடன் ஒப்பிடக் கூடியதாக உள்ளதா அல்லது அதனை விடக் குறைவா அல்லது கூடவா என்பதை தீர்மானித்தக் கொள்ள முடியும்.

  2. ஒரு ஏக்கரிலிருந்து பெறப்படும் சராசரி பெறுமானம் (பயிர்களிலிருந்து) 
    இது பயிர்களிலிருந்து பெறப்படும் விளைச்சல், விலை என்னபவற்றிற்கிடையேயான தொடர்பாகும். இதன் மூலம் இலாபகரமான பயிர் எது என்பதைத் தீர்மானிக்கலாம். அப்பயிரை செய்கைபண்ணி விவசாயிகள் தாம் எதிர்பார்க்கும் விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  3. இயந்திரங்கள், சக்திவலு செலவு 
    தேவையான போது அவசியமான இயந்திரங்களைப் பயன்படுத்தவதன் மூலம் வினைத்திறனான உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  4. ஒரு ஏக்கரில் உரத்திற்கு ஏற்படும் செலவு

  5. ஒரு அலகிற்கான உற்பத்திச் செலவு

பண்ணை இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தல்

தொழில்நுட்ப அபிவிருத்தியுடன் இன்று விவசாயத்தில் இயந்திரங்களின் பாவனை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கான பிரதான காரணங்களாக தொழிலாளர்களிற்கான தட்டுப்பாடு, தொழிலாளர்களிற்கான செலவு அதிகரித்தமை போன்ற காரணிகளைக் குறிப்பிடலாம். இயந்திரமயமாக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் செலவினைக் குறைத்து, வினைத்திறனை அதிகரிப்பதோடு, மேலும் பல நன்மைகளை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும். ஆரம்ப நிலப்பண்படுத்தல் தொடங்கி அனைத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிற்குமான இயந்திரங்கள் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன.
இயந்திரங்களைப் பயன்படுத்துவதிலுள்ள நன்மைகள் 

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பின்வரும் நன்மைகளைப் பெறுவதற்காகவே இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • தொழிலாளர்களிற்கான செலவைக் குறைத்தல்
  • வினைத்திறனை அதிகரிப்பதற்கு
  • காலத்தை மீதப்படுத்த
  • விளைச்சலின் தரத்தை உயர்த்த
இயந்திரங்களைப் பயன்படுத்த முன்னர் பொருத்தமான தன்மையை பரிசோதிப்பதன் முக்கியத்துவம்

இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது தம்மிடமுள்ள நிலத்தின் அளவு, பொருளாதார நிலை, சுற்றாடலிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற நிலைமைகளிற்கு இயந்திரங்கள் பொருத்தமானதாக உள்ளதா என்பதை அறிந்து கொள்வதே பொருத்தமான தன்மையைப் பரிசோதித்தல் ஆகும். உதாரணமாக சிறிய நிலத் துண்டத்தில் குறிப்பிட்ட சில இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது பிரச்சினைகள் ஏற்படலாம். சில இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு அதிகளவான செலவு ஏற்படலாம்.
இயந்திரங்களைப் பயன்படுத்துவதிலுள்ள வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்

இயந்திரங்களைப் பயன்படுத்தவதிலுள்ள வெற்றி பெரும்பாலும் பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது.
  • மூலதனச் செலவு
  • தொழிலாளர்களின் தொழிற்திறன்
  • எரிபொருட் செலவு
  • நிலத்தின் பரப்பளவு
  • சுற்றாடலிற்கு ஏற்படும் பாதிப்புகள்
ஆரம்ப நிலப்பண்படுத்தல் முதல் அனைத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளின் போதும் 

பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவ்வியந்திரங்களின் படங்களைப் பார்த்து அவற்றின் கட்டமைப்புகளை இனங்கண்டு கொள்ள முடியும்.
தயவுசெய்து பின்வருவனவற்றிற்கான படங்களை சிங்களத்திலிருந்து copy பண்ணி போடவும். நிலத்தைப் பண்படுத்தும் இயந்திரங்கள்
  • சட்டிக் கலப்பை – Disc plough ஹரோ கலப்பை – Disc harrow
  • முட் கலப்பை – Spring loaded tiller மட்டப்படுத்தி – Land leveller
நாற்றுமேடை இயந்திரங்கள் 
விதையிடும் கருவி – Drum seeder
நாற்று நடும் இயந்திரங்கள் 

நெல் நாற்று நடுகை இயந்திரம் – Rice planter
நோய், பீடைகளைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் 

தெளிகருவிகள் – Sprayers
பயிற்றுவிக்கும் போதும், கத்தரிக்கும் போதும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் 

புல் வெட்டி – Grass cutter கத்தரிக்கும் செகட்டியர் – Pruning secuteur
வேலி வெட்டி – hedge shear
தோட்ட அரிவாள் – Garden saw கவ்வாத்துக் கத்தி – Pruning Knife
ஒட்டுவதற்கான கத்தி – Budding and grafting knife
அறுவடைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் 

இணைந்த அருவி வெட்டி – combined harvester
அறுவடைக்குப் பின்னர் பதனிடும் போதும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் 

சூடடிக்கும் இயந்திரம் – Paddy thresher